Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தொல்புரம் பாணாவெட்டி வைத்தியசாலையின் மருத்துவரை இடமாற்ற வேண்டாம்!

நோயாளர் நலன்புரி சங்கமும் மக்களும் கோரிக்கை.

தொல்புரம் பாணாவெட்டி வைத்தியசாலையின் மருத்துவரை இடமாற்ற வேண்டாம். -நோயாளர் நலன்புரி சங்கமும் மக்களும் கோரிக்கை-

தொல்புரம் - பாணாவெட்டி வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வே.குருபரனின் இடமாற்றத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கமும் பிரதேசத்திலுள்ள பொது அமைப்புகளும்  இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர். 
இன்று செவ்வாய்க்கிழமை  வைத்தியசாலைக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜாவிடம் இவ்விடயம் தொடர்பான கோரிக்கை கடிதம் கையளிக்கப்பட்டது. 

பாணாவெட்டி வைத்தியசாலையானது   தொல்புரம், சுழிபுரம், மூளாய், பொன்னாலை, பண்ணாகம், சித்தங்கேணி உள்ளிட்ட பல பிரதேசங்களிலுள்ள  ஆயிரக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பயன்பெறும் வைத்தியசாலையாகும். இது பல்வேறு வளப்பற்றாக்குறைகளுடன் இயங்கி வருகின்றது. 
இதனை பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்துமாறு  தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் வைத்தியர் குருபரன் இவ்வைத்தியசாலையை பொறுப்பேற்ற பின்னர் இங்கு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இவ் வைத்தியசாலையில்  அபிவிருத்திப் பணிகள்  இடம்பெற்று வருகின்ற அதேவேளை 
பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையும்   கிடைக்கின்றது. இதனால் தினமும் நூற்றுக்கணக்கானோர் நன்மையடைகின்றனர். 

இதனால் இந்தப் பணிகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக மருத்துவர் வே.குருபரனை குறைந்தது அடுத்துவரும்  ஈாாண்டுகளாவது  இங்கு தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்குமாறு கோரிக்கை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த கோரிக்கை கடிதம் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.