Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

பலதும் பத்தும்:- 24,04,2025 - வேட்பாளரொருவர் கைது!

மீன் வியாபாரிக்கு 10,000 ரூபாய் தண்டம்!

வேட்பாளரொருவர் கைது! 

புத்தளம் - ரத்மல்யாய பகுதியில் புத்தளம் உதவி தேர்தல் ஆணையாளர் மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்தசுற்றிவளைப்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக புத்தளம் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியால்விநியோகிக்கப்பட்ட 85 வாக்காளர் அட்டைகளுடன் வேட்பாளரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர். குறித்த வாக்காளர் அட்டைகள்இ தபால்காரரால் சந்தேகநபருக்கு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன்சந்தேகநபரான தபால்காரர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளருக்கு உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டை வழங்கியதாகக்கூறப்படும் புத்தளம் பிரதான தபால் நிலையத்தில் தபால்காரர் ஒருவர் இன்று (24) பிற்பகல் கைதுசெய்யப்பட்டதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபர் புத்தளம் பிரதான தபால் நிலையத்தில் கடித விநியோகிக்கும் நபர் என்றும்இ ரத்மலைபகுதியில் கடிதங்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். வேட்பாளர் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்துஇ அவருக்கு இந்த அதிகாரப்பூர்வ வாக்குச் சீட்டுகளை வழங்கியத பால்காரர் கைதுசெய்யப்பட்டார்.

மே மாதம் 5 ஆம் மற்றும்6 ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாட்டின் சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் மே மாதம் 5 ஆம் மற்றும்6 ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு மூடப்பட்டிருக்கும் பாடசாலைகள் எதிர்வரும் 7 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுமெனதெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஏப்ரல் 26 ஆம் திகதியை தேசிய துக்க தினம்! 

புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவையொட்டிஇ அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் 2025 ஏப்ரல் 26 ஆம் திகதியை தேசிய துக்க தினமாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாகம்இ மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்துள்ளது. அதன்படிஇ 2025 ஏப்ரல் 26 ஆம் திகதி அன்று அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசிய கொடியைஅரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுமாறும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய விமானங்களுக்கு தடை! 

இந்தியாவுடனான அனைத்து வகை வர்த்தகங்களையும் நிறுத்த பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. மேலும்இ பாகிஸ்தானின் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்துஇ இந்தியாவுடன் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் உரிமையைப் பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் அதிகாரிகளின் எண்ணிக்கை 30-ஆக குறைக்கவுள்ளதாகத்தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு சார்க் நாடுகள் விசா வழங்குவதையும் நிறுத்த பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

 தபால் மூல வாக்குப்பதிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (25) இரண்டாவது நாளாக இடம்பெறவுள்ளநிலையில் அரச நிறுவனங்கள்இ பொலிஸ்இ முப்படைஇ பாடசாலைஇ கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்டநிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தபால் மூல வாக்காளர்கள் இன்றும் (25) ஏப்ரல் 28 மற்றும்29 ஆகிய திககளிலும் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.  இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக 648இ495 விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  இதேவேளைஇ தபால்மூல வாக்களிப்புக்காக வழங்கப்பட்டுள்ள காலம் மீண்டும் நீடிக்கப்படமாட்டாது என தேர்தல்கள்ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்இ

ஜனாதிபதி இரங்கல்! 

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க (24) பிற்பகல் வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்றார். தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதியைஇ இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி பேராயர் பிரையன்உதைக்வே ஆண்டகை (யுசஉhடிiளாழி டீசயைn N. ருனயபைறந) வரவேற்றார். பின்னர்இ பேராயருடன் சிறிது நேரம் உரையாடிய ஜனாதிபதிஇ அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில்குறிப்பொன்றைப் பதிந்தார். நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களுக்காக உலகெங்கிலும்உள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் இரங்கலையும் ஜனாதிபதிதெரிவித்தார்.

பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு!

ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடுநடத்தியுள்ளது. பாகிஸ்தான் இராணுவத்த்தின் அத்துமீறலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. சிறிய அளவில் இந்த துப்பாக்கி சூடு நிகழ்வு நடைபெற்று இருப்பதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகின்றன.  இந்த துப்பாக்கி சூடில் இந்திய வீரர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மீன் வியாபாரிக்கு 10இ000 ரூபாய் தண்டம்!

புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட மீன் வியாபாரிக்குஇ மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் 10இ000 ரூபாய்தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் சந்தை பகுதியில் புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட மீன் வியாபாரிக்கு எதிராக மானிப்பாய்பொது சுகாதார பரிசோதகர் கி. அஜந்தன் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளைஇ மன்றில் முன்னிலையாகி இருந்த மீன் வியாபாரிதன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்துஇ வியாபாரியை கடுமையாக எச்சரித்த மன்று 10இ000 ரூபாய்தண்டம் விதித்தது.