Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கள கற்கைப் பயணம்: யாழ் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள்

.

யாழ் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் விரிவுரையாளர்  எஸ். சிவகாந்தன் மற்றும் உதவி விரிவுரையாளர்களுடன் இணைந்து, குற்றவியல் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக (06) நேற்று முன்தினம் யாழ்ப்பாண சிறையில் கள ஆய்வொன்றை மேற்கொண்டார்கள்.
ஆய்வின் போது போது, சிறைச்சாலை சார்ந்த பல்வேறு அம்சங்கள், சிறையின் நோக்கங்கள், கைதிகளுக்கான மறுவாழ்வு திட்டங்கள் உள்ளிட்டவை பற்றி முழுமையான விளக்கமும் வழிகாட்டுதலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

குற்றவியல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இத்தகவல்களை மாணவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்தனர்.

கள கற்கைப் பயணம், சிறை அமைப்பைச் சுற்றியுள்ள பல புதிய அறிவுகளையும் பார்வைகளையும் மாணவர்களுக்கு  வழங்கியது. பீடாதிபருக்கும், சமூகவியல் துறைத் தலைவருக்கும், மாணவர்களின் பேராசிரியர்களுக்கும், மேலும் அம்மாணவர்களுக்கு அனுமதி வழங்கி வழிகாட்டிய சிறை மற்றும் குற்றவியல் பிரிவு அதிகாரிகளுக்கும் பல்கலை மாணவர்கள் தங்கள் இதயப்பூர்வமான நன்றியை தெரிவிப்பதாக குறிப்பிட்டனர்.
குற்றவியல் பயில்துறையில் இது ஒரு முக்கியத்துவம் மிக்க மற்றும் வளமான கற்றல் அனுபவமாக அமைந்துள்ளது என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.