திரைப்பட மூன்று பாடல்களுக்கு சுமார் ஐந்து கோடி கேட்டு இளையராஜாவால் வழக்கு தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
இளையராஜாவை சமூக வலைத்தளங்கள் சீண்டினாலும் சட்டப் பிரகாரம் பார்த்தால், அவரிடம் அனுமதி பெற்றே இந்தப் பாடல்களை திரைப்படங்களில் பயன்படுத்தல் வேண்டும்.

GBU திரைப்பட மூன்று பாடல்களுக்கு சுமார் ஐந்து கோடி கேட்டு இளையராஜாவால் வழக்கு தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
Copy rights என்பது எப்படி ஒரு இசையமைப்பாளருக்கு செல்கிறது? தயாரிப்பாளர் தானே அவருக்கு பணம் கொடுத்து அந்தப் பாடல்களை உருவாக்க சொல்கின்றார்? நியாயமாக பார்த்தால் தயாரிப்பாளர் தான் அந்தப் பாடலுக்கான சொந்தக்காரர் என்ற வாதங்கள் அடிக்கடி, இப்படியான நேரங்களில், வருகின்றன.
மறுபக்கம் அந்தப் பாடலை எழுதிய கவிஞருக்கு அதில் உரிமை இருக்கிறது தானே? ஏன் கவிஞர்கள் பேசாமல் இருக்கின்றார்கள்? என்ற கேள்வியும் வருகின்றது.
இதற்கெல்லாம் பதிலை இந்திய 1957ம் ஆண்டு Copyrights சட்டம் தெளிவாக சொல்கிறது,
அதாவது அந்தப் பாடலை உருவாக்கும் போது எப்படியான ஒரு ஒப்பந்தம் இந்த இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் தரப்புக்களுக் கிடையில் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றதோ அதைப் பொறுத்து இந்த உரிமை யாருக்கு என்பது நிச்சயிக்கப்படும்.
80, 90களில் கிட்டத்தட்ட monopolyயில் தனது இசையில் இராஜாங்கம் செய்து கொண்டிருந்தபோது, இளையராஜா சொல்வதற்கு எல்லாம் அப்போதைய தயாரிப்பாளர்களும் பாடல் ஆசிரியர்களும் தலையாட்டினார்கள். எனவே அந்தப் பாடல்களின் உரிமை எல்லாம் அவர் பக்கம் இருந்திருக்கிறது.
ஆனால் இப்போது பாடல் உரிமங்களை இதற்கான பாடல் தயாரிக்கும் நிறுவனங்கள் (Sony India, Saregama, Tips, Madras Talkies etc...) வைத்திருக்கின்றன. A.R.ரஹ்மான் போன்ற பிரபலமான இசையமைப்பாளர்கள் சில நிபந்தனைகளை ஒப்பந்தங்கள் வாயிலாக விதித்து இருக்கக்கூடும்.
இளையராஜாவை சமூக வலைத்தளங்கள் சீண்டினாலும் சட்டப் பிரகாரம் பார்த்தால், அவரிடம் அனுமதி பெற்றே இந்தப் பாடல்களை திரைப்படங்களில் பயன்படுத்தல் வேண்டும்.