Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மரநடுகை திட்டத்தில் பங்காற்றியவர்களுக்கு சூழகம் அமைப்பினரால் உலருணவு பொதி வழங்கல்.

,

மரநடுகை திட்டத்தில் பங்காற்றியவர்களுக்கு சூழகம் அமைப்பினரால் உலருணவு பொதி வழங்கல்.

சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ஏற்பாட்டில் ( சூழகம் ) புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் வீதியிலிருந்து  புங்குடுதீவு குறிச்சுக்காடு சந்தி வரையிலான பல கிலோமீட்டர் நீளமான வீதியில் வனவள பரிபாலன திணைக்களத்தினால்  நவம்பர் மாதம் நடுகை செய்யப்பட்ட 175 மரக்கன்றுகளை மீளவும் பராமரிக்கும் செயற்பாடு அண்மையில் சூழகம் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டது. 
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மர பாதுகாப்பு கூடுகளும் மற்றும் கால்நடைகளால் பாதிக்கப்பட்ட மர பாதுகாப்பு கூடுகளும் மறுசீரமைக்கப்பட்டதோடு  மேலும் பத்து மரக்கன்றுகளும் நடுகை செய்யப்பட்டு பாதுகாப்பு கூடுகள் அமைக்கப்பட்டுள்ளன. 

சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்ற இச்செயற்பாடுகளில்  இணைந்து செயலாற்றியவர்களுக்கு  நுளம்பு வலைகள் மற்றும் உலருணவு, சுகாதார பாதுகாப்பு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மேற்படி சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்திற்கான நிதியுதவியாக புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தினை சேர்ந்த திரு. சின்னத்தம்பி நகுலேஸ்வரன் (சுவிஸ்) அவர்கள் 50000 ரூபாயினையும் , ஜனநாயக தமிழரசுக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா அவர்கள் 25000 ரூபாவினையும் , சூழகம் அமைப்பின் உப தலைவர்  கருணாகரன் குணாளன்  அவர்கள் 25000 ரூபாவினையும் வழங்கியிருந்தனர்.