Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சைபர் குற்றங்களில் ஈடுபட்ட சீனக் கைதிகள் நாடுகடத்தல்

,

நாட்டில் தங்கியிருந்தபோது கணினி குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 85 சீனப் பிரஜைகள் இந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இன்று (20) அதிகாலை விசேட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நாடுகடத்தப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

நாட்டின் நீதிமன்றங்களால் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட இந்த சீனப் பிரஜைகள் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் அவர்களை நாடுகடத்தும் முடிவின் அடிப்படையில் வெலிசரவில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டனர். 

இந்த சீனப் பிரஜைகள் 05 பேருந்துகளில் ஏற்றப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையான பாதுகாப்பின் கீழ் விமானத்தில் ஏற்றப்பட்டனர். 

இந்த சீனப் பிரஜைகள் குழுவுடன் இந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் 85 பேரும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் 172 பேரும் இந்த விமானத்தில் பயணித்ததாக கட்டுநாயக்க விமான நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.