Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

இதயத்தை பாதிக்கும் கொலஸ்டிரால்! கொலஸ்டிரால் என்பது உயிரணு மெல்லிய சவ்வுகளில் காணப்படும் கொழுப்பாகும்.

இருதய பாதுகாப்பு எனும் போது கொழுப்பின் அளவில் கவனம் செலுத்த வேண்டும்!

“கொலஸ்டிரால்- இன்று பலரது பிரச்சினை கொழுப்பு எனப்படும் கெர்லஸ்டிரால் அதிகம் என்பதுதான்.

எந்த வயதிலும் இருதய பாதுகாப்பு எனும் போது கொலஸ்டிரால் அளவினை கவனம் கொடுத்து பார்க்க வேண்டி உள்ளது.

கொலஸ்டிரால் என்பது உயிரணு மெல்லிய சவ்வுகளில் காணப்படும் கொழுப்பாகும். கொலஸ்டிரால் ஆரோக்கிய செயல்பாட்டிற்கு இன்றியமையாதது தான்.

இந்த கொலஸ்டிராலை பொதுவில் இரு வகையாகப் பிரிக்கலாம்.* நல்ல கொலஸ்டிரால் (HDL) * தீய கொலஸ்டிரால் (LDL) என பிரித்துக் கொள்ளலாம்.

இதற்கு மேலும் விவரங்கள் இருந்தாலும் இந்த அளவு புரிதலே நம்மை காத்து கொள்ள வழி வகுக்கும்.

நல்ல கொலஸ்டிரால் இதயத்திற்கு நல்ல பாதுகாப்பை அளிக்கும். தீய அல்லது கெட்ட கொலஸ்டிரால் தமனிகளில் படிந்து பல்வேறு இதய நோய்களை உண்டாக்கும்.

கொலஸ்டிரால் நமக்கு இரு வழிகளில் கிடைக்கின்றது.* உடலாகவே உற்பத்தி செய்து கொள்ளும். * நாம் உட்கொள்ளும் உணவில் இருந்தும் கிடைக்கின்றது.

கொலஸ்டிராலின் பணிகள்- * ஹார்மோன் உற்பத்தி- ஈஸ்ட்ரொஜன், புரோ ஜெஸ்ட்ரான், டெஸ்டோ ஸ்டிரான், கார்டிஸால் இவைகளின் உற்பத்திக்கு காரணம் கொலஸ்டிரால்தான்.

* எலும்பு, பல் இவை உறுதியாய் இருக்க வைட்டமின் ‘டி’ தேவை அல்லவா. அதனை சூரிய ஒளியில் இருந்து உறிஞ்சி உடலில் ‘டி’ சத்தினை சேர்க்க கொலஸ்டிரால்தான் காரணம்.

* பித்த நீர் செரிமான திரவம் உருவாகவும் கொலஸ்டிரால்தான் பொறுப்பாகின்றது

.* செல்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கின்றது.

* நோய் எதிர்ப்பு மண்டலம் செயல்பட அவசியமாகின்றது.

* இன்னும் பல முக்கிய பங்களிப்பு கொலஸ்டிராலின் மூலம் உடல் இயக்கத்திற்கு கிடைக்கின்றது.

இருப்பினும் இதன் அளவு மீறும்போது இருதய பாதிப்பினை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.

அதிகம் பொரித்த, வறுத்த உணவுகள் நம் பழக்கத்தில் அதிகமாகவே இன்றும் உள்ளன. இவை இருதயத்திற்கு நல்லதல்ல.

கரையும் நார் சத்து உணவுகள், ஓட்ஸ், முழு தானிய உணவு, பீன்ஸ் வகைகள், கொட்டை வகைகள், ஆப்பிள், திராட்சை, சிட்ரஸ் பழ வகைகள், மீன், ஆலிவ் எண்ணை, விதைகள் இவை கெட்ட கொழுப்பினை குறைக்க பெரிதும் உதவுகின்றன.

ஒரு முறை மருத்துவ ஆலோசனை பெற்று சரி செய்து கொள்ளலாம்.மாரடைப்பு என்பது இருதயத்துக்கு போதுமான ரத்த ஓட்டம் இல்லாதபோது அதாவது ரத்த குழாயில் ரத்த ஓட்டம், ஆக்ஸினே தடைபடும்போது ஏற்படுகின்றது.

இந்த அடைப்பு கொழுப்பு, கொலஸ்டிரால் இவற்றால் ஏற்படுகின்றது. பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் இருதய தசை பாதிக்கப்படுகின்றது.

இதற்கு உடனடி சிகிச்சை கிடைத்தாலே மனிதனை இறப்பில் இருந்து காப்பாற்ற முடிகின்றது. இதன் அறிகுறிகளாக…* நெஞ்சு வலி, அழுத்தம், இறுக்கம் இருக்கும், இருக்கலாம்.

* தோள் பட்டை, கழுத்து, தாடை, பல், மேல் வயிற்றில் வலி இருக்கலாம்.

* வியர்த்து கொட்டலாம்.* நெஞ்செரிச்சல், அஜீரணம் இருக்கலாம்

.* மயக்கம்

* வயிற்று பிரட்டல்

* மூச்சு வாங்குதல் இருக்கலாம்.

வயது கூடுதல், புகை, மது, உயர் ரத்த அழுத்தம், கூடுதல் எடை, சர்க்கரை நோய், பரம்பரை, போதிய உடற்பயிற்சி இன்மை, மன உளைச்சல் ஆகியவை மாரடைப்பு அபாயத்தினைக் கூட்டும் காரணங்கள் ஆகின்றன.

முறையான மருத்துவ கவனிப்பும், வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாறுதல்களும் பாதிப்பினை தவிர்க்க பெரிதும் உதவுகின்றன.

உடனடியாக பாதிக்கப்பட்டவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதே சிறந்த தீர்வு.

எழுத்தின் மூலமாக அனைத்தையும் விளக்குவது கடினம் என்பதாலும், கூடுதல் கவனம் தேவை என்பதாலும் சிலவற்றினை எழுத்தில் தவிர்க்கின்றோம்.

டோபமைன்– டோபமைன் என்ற ஹார்மோன் உடலின் பல செயல்பாடுகளுக்கு முக்கியம் ஆகின்றது.

அசைவுகள், ஞாபகம், மனநிலை, படிப்பாற்றல் இவைகளுக்கு முக்கியமானதாகின்றது. இதனை “Happy Hormone-Feel Goodhormone” என்பர்.

ஒருவித மன மகிழ்வோடு இருக்கச் செய்யும் ஹார்மோன் இது. இது சீராக இருக்கும்போது மூளை நன்கு செயல்படும்.

நரம்பு மண்டல தொடர்பும் சீராய் இருக்கும்.டோபமைன் குறைவாக இருக்கும்போது பார்க்கின்ஸன் நோய் பாதிப்பு-நடுக்கு வாதம், மனச்சோர்வு, மன உளைச்சல் இருக்கும்.

இன்றைய கால சூழ்நிலையில் சமூக ஊடகங்கள், போனில் விளையாட்டுகள் இவை மகிழ்விப்பது போல் தோன்றினாலும் பின்பு அவை ஒருவரை சோர்வாக, மன உளைச்சலோடு இருப்பவராக ஆக்கி விடுகின்றன.

அடிக்கடி கடைக்கு செல்பவர்கள் காபி, டீ குடிப்பார்கள். ஜாலி புட் எனப்படும் ஆரோக்கியம் இல்லாத உணவினை உண்பவர்கள் காலப் போக்கில் சோர்வாக, மகிழ்ச்சி இன்றி இருப்பர்.

* நல்ல புத்தகங்களை படிப்பது.

* சூரிய ஒளி உடலில் படும்படி காலை (அ) மாலை வெளியில் செல்பவர்கள்.

* அன்றாடம் முறையாக உடற்பயிற்சி செய்பவர்கள்.

* தன்குறிக்கோள்களை விடாது தொடர்பவர்கள்.

* சாதாரண நீரில் ஷவர் முறையில் குளியல் எடுப்பவர்கள்

.* இசை போன்ற கலைகளில் ஈடுபடுதல் (அ) ஆர்வம் இருப்பவர்களுக்கு இயற்கையிலேயே ‘டோபமைன்’ அளவு சீராக இருக்கும்.

மூளைக்கான உணவு: பாதாம், கிரீன்டீ, மீன், முட்டை, பூசணி விதை, அடர்ந்த சாக்லேட், மஞ்சள், தயிர், ஓட்ஸ், புரோக்லி, ஆரஞ்சு, காபி.போன்றவை மூளைக்கு சிறந்த உணவாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உணவினைக் கூட எப்ப சாப்பிட வேண்டும். அதாவது எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பதனைக் கூட ஆய்வு செய்து வெளியிட்டுள்ளனர் சத்துணவு நிபுணர்கள்.

* பொதுவில் காலை 7 மணி முதல் 9 மணி வரை காலை உணவிற்கான சிறந்த நேரம் என்கின்றனர்.

இது வயிற்றுக்கு உகந்தது என்கின்றனர்.

* காலை 9 மணி முதல் 11 மணி வரை கணையம் செயல்பாட்டுத் திறனைக் கூட்டுகிறது.

* 11 மணி முதல் 1 மணிக்குள் காலை அளவான நிதான உணவு இருதயத்திற்கு நல்லது.

* பகல் 1 மணி முதல் 3 மணி வரை சீரண மண்டலம் இயங்குகிறது.விடியற்காலை மூச்சு பயிற்சி செய்ய சிறந்த நேரம்.

* வயிற்றினை பாதுகாக்க முட்ட, முட்ட உணவு மற்றும் கனத்த உணவு இவைகளைத் தவிர்க்க வேண்டும்.

* கணையத்தினை பாதுகாக்க அதிக இனிப்புகளை தவிர்க்க வேண்டும்.

* இருதயத்தினை பாதுகாக்க இரவில் அதிக நேரம் கண் விழிக்கக் கூடாது.இரவில் 7 மணி முதல் 9 மணி வரை கடினமான உணவு சாப்பிடக் கூடாது.இரவு 9 மணி முதல் 11 மணி அளவில் டி.வி.பார்த்து நொறுக்குத்தீனி, சுவீட்ஸ் இவை சாப்பிடக்…”,