Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நுவரெலியா நகரில் 108 பாண லிங்கங்களினதும் புனித நதி தீர்த்த ஊர்வலம் கோலாகாலமாக நடைபெற்றது.

புனித நதி தீர்த்த பவனி

நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலய காயத்ரி பீடத்தில் 108 பாண லிங்கங்கள் பிரதிஷ்டை முன்னிட்டு பாண லிங்கங்களும், புனித நதி தீர்த்த பவனியும் நுவரெலியா நகரில் நடைபெற்றது.

நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலயம் காயத்ரி பீடத்தில் இந்தியா நர்மதா நதியில் கண்டெடுக்கப்பட்ட 108 பாண லிங்கங்கள் பஞ்சகுண்ட பிரதிஷ்டா மகா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் 10 ஆம் திகதி 9.10 மணி முதல் 10.12 மணிவரையான சுப முகூர்த்த வேளையில் நடைபெறும்.

இதனை முன்னிட்டு 06 நுவரெலியா நகரில் 108 பாண லிங்கங்களினதும் புனித நதி தீர்த்த ஊர்வலம் கோலாகாலமாக நடைபெற்றது.

நுவரெலியா கண்டி வீதியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் ஆலயத்திற்கு அருகில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில்  பாரத நாட்டிலிருந்து  கொண்டுவரப்பட்ட ஒன்பது புனித நதிகளான நர்மதா, சிந்து, யமுனா, சரஸ்வதி, காவேரி, பிரம்மபுத்திரா, கங்கா, கிருஷ்ணா, கோதாவரி, இவைகளுடன் திருவேணி மகா கும்பமேலா தீர்த்தமும் மற்றும் இந்தியா நர்மதா நதியிலிருந்து கடந்த 100 வருடங்களுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட 108 பாண லிங்கங்கள் ஜேர்மன் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த 108 பாண லிங்கங்கள் சுவாமி முருகேசு மகரஷியின் தவத்தின் மூலம் ஜேர்மன் நாட்டில் இருப்பதை தெரிந்துக் கொண்ட பின் அவரின் வேண்டுக்கோளுக்கிணங்க ஜேர்மன் நாட்டிலிருந்து நுவரெலியா இலங்காதீஸ்வரர் ஆலயத்திற்கு கடந்த 25 வருடங்களுக்கு முன் கொண்டுவரப்பட்டது.அந்த 108 பாண லிங்கங்களும் எதிர்வரும் 10 ஆம் திகதி காயத்ரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பவுள்ளது.

இதனை முன்னிட்டு லிங்கங்கள் மற்றும் புனித தீர்த்த நீரும் ஊர்வலமாக கண்டி வீதி, பழையகடை வீதி,புதியகடை வீதி, தர்மபால சந்தி, உடபுசல்லாவ வீதி, விசேட பொருளாதார மத்திய நிலையம் வீதி, லேடிமெக்லம் வீதி வழியாக ஊர்வலம் ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலய காயத்ரி பீடம் சென்றடைந்தது.

கும்பாபிஷேகம் பெருவிழாவை முன்னிட்டு  06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  கிரியா கால நிகழ்வுகள் காலை 5.30 மணிக்கு விநாயகர்  வழிப்பாடு புண்ணியாக வாசனம் தேவ பிராமண அனுஞ்ஞை முகூர்த்தப் பத்திரிக்கை வாசித்தலுடன் ஆரம்பமாகியது.

நாளை (07) ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணி முதல் விநாயகர் வழிபாடு புண்ணியாகவாசனம்,யாகசாலை பிரவேசம்  யாக பூஜை, தீபாராதனை, வேத தோத்திர திருமுறை பாராயணம் என்பன நடைபெற உள்ளது.

8 ஆம் திகதி காலை 8 மணி முதல் தைலாப்பியாங்கம் (எண்ணெய்  காப்பு சாத்துதல் ) இரவு முழுவதுமாக நடைபெறும். இதனை தொடர்ந்து (09) ஆம் திகதி புதன்கிழமை விசேட யாக பூஜை, அடியார்களுக்கு விபூதி பிரசாரம் வழங்கப்படும். குருமார்கள் உபசாரம் நடைபெறும்.

எதிர்வரும் 10 ஆம் திகதி 9.10 மணி முதல் 10.12 மணிவரையுள்ள சுப முகூர்த்த வேளையில் தேவர்கள் பூமாரி சொரிய 108 பாண லிங்க மூர்த்திகளுக்கும் திருமஞ்சண குட முழுக்குப் பெருவிழா மஹா கும்பாபிஷேகம் நடைபெறும். அதனை தொடர்ந்து மகேஸ்வர பூஜை நடைபெற்று பக்த அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.