Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

மாரடைப்பால் இறந்தவர்: வேகத்தடையால் உயிர் பிழைத்த அதிசயம்

.

“மும்பை:மகாராஷ்டிர மாநிலத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் கசாபா-பவடா பகுதியைச் சேர்ந்தவர் பாண்டுரங் உல்பே (65). கடந்த டிசம்பர் 16-ம் தேதி இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.பரிசோதித்த டாக்டர்கள், அவர் உயிரிழந்து விட்டார் என தெரிவித்ததல் உல்பே குடும்பத்தினர் சோகமடைந்தனர்.

அதன்பின், அவரது உடலை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டனர். வீட்டில் இறுதிச்சடங்குகள் தயாராகி கொண்டிருந்தன.வீட்டுக்குச் செல்லும் வழியில் வேகத்தடை ஒன்றில் ஆம்புலன்ஸ் ஏறி இறங்கியது.

அப்போது உல்பேவின் விரல்கள் அசைந்தன. இதைக் கண்ட அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அவருக்கு உயிர் இருக்கிறது என நம்பினர்.இதையடுத்து, உல்பேவை வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு 2 வாரம் வரை மருத்துவமனையில் அவர் தங்க வைக்கப்பட்டார். ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதில் அவர் குணமடைந்து உடல்நலம் தேறியுள்ளார்.

இந்நிலையில், உல்பே சிகிச்சை முடிந்து கடந்த திங்கட்கிழமை அவரது வீட்டுக்கு நடந்தே சென்றார்.

வேகத்தடை வழியே ஆம்புலன்ஸ் சென்றதில் உல்பே உயிர் பிழைத்து இன்று குடும்பத்தினருடன் ஒன்றாக வாழ்ந்து வருவது அப்பகுதி மக்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.”,