பிரபாகரன் புஜத்தில் குத்திய எம்.ஜி.ஆர்! துக்கையாண்டி ஐ.பி.எஸ்!
துக்கையாண்டி ஐ.பி.எஸ் எழுதியுள்ள 'ஊர்க்காவலன்'

'எம்.ஜி.ஆர் பிரபாகரனைக் கட்டிப்பிடித்து, அவரது வலது புஜத்தில் செல்லமாய் ஒரு குத்து விட்டார். உடனே பிரபாகரன் அடுத்த புஜத்தையும் காட்டி, 'இன்னும் ஒரு குத்து' என்று கேட்டவுடன் எம்.ஜி.ஆர் உருகிப்போனார்'' - துக்கையாண்டி ஐ.பி.எஸ் எழுதியுள்ள 'ஊர்க்காவலன்' என்ற தன் வாழ்க்கை வரலாற்று நூலில் வரும் பகுதி இது. தமிழகக் காவல்துறைக் கூடுதல் தலைவர் பதவி வரை உயர்ந்து ஓய்வுபெற்ற துக்கையாண்டி, பரபரப்பான பல வழக்குகளைக் கையாண்டவர். ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளை விசாரித்தபோது கவனம் பெற்றவர். பிறகு ஜெயலலிதா ஆட்சியில் கருணாநிதி மீது போடப்பட்ட ஊழல் வழக்கையும் விசாரித்தவர்.
பயிற்சி டி.எஸ்.பி-யாக இருந்தபோது முதல்வர் எம்.ஜி.ஆரின் நேரடிப் பார்வை இவர்மீது பட்டது. பிறகு தேவாரத்துடன் இணைந்து நக்சல்களை அடக்கும் பணியில் ஈடுபட்டார். 'என்கவுண்டரில் எனக்கு நம்பிக்கை இல்லை' எனும் இவர், நக்சல்கள் உருவாக என்ன காரணம் என்பதையும் நேர்மையாக எழுதியிருக்கிறார். நக்சல் ஒழிப்புப் படை செய்த தவறுகளையும் விவரித்திருக்கிறார். கியூ பிராஞ்ச் எஸ்.பி-யாக இருந்தபோது இலங்கைப் போராளிகளுடன் இவர் தொடர்புகொள்ள நேர்ந்தது. அதுபற்றி துக்கையாண்டி எழுதிய சில பகுதிகள் இங்கே...
உணவுக்குச் சிரமப்பட்ட ஈழப் போராளிகள்!
கியூ பிரிவில் பொறுப்பேற்றதும் இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் தலைவர்களை ஒவ்வொருவராகச் சந்தித்தேன். அப்போது எல்.டி.டி.ஈ இயக்கத் தலைவர் பிரபாகரன் இங்கு இல்லை. ஏனைய குழுக்கள் பிளாட் உமா மகேஸ்வரன், டெலோ செல்வம், ஈ.பி.ஆர்.எல்.எஃப் பத்மநாபா, ஈராஸ் பாலகுமார் போன்றோரைச் சந்தித்தேன். இந்திய அரசு அந்தப் போராளிக் குழுக்களுக்குப் பயிற்சி அளித்து ஆயுதங்களும் வழங்கி, இலங்கை அரசுக்கு எதிராகப் போர் புரிய அனுப்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால், எல்.டி.டி.ஈ. போராளிகள் தவிர மற்றக் குழுக்களால் இலங்கைக்குச் செல்ல முடியவில்லை. அவர்கள் கடலுடன் போராடிக் கரையேறினாலும் அங்கு இலங்கை ராணுவத்துடனோ அல்லது எல்.டி.டி.ஈ. உடனோ போராட வேண்டியிருந்தது. அதனால், இலங்கைக்குப் போகாமல் கையில் ஆயுதங்களுடன் தமிழ்நாட்டிலேயே தங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள்.
உணவு உண்பதற்கு, அவர்களிடம் பணம் இல்லை. வயிற்றிலே பசி, கையிலே ஆயுதம். வருவாய் ஈட்ட எந்த வேலையும் இல்லை. எனவே இவர்கள் இலங்கைத் தமிழர்களிலேயே மிக வசதியாக வாழ்கின்ற சென்னை வாசிகளைக் கடத்தி வைத்துக்கொண்டுஇ அவர்களை விடுவிக்கப் பணம் கேட்டு வாங்கினர். இவ்வாறு நான்கு கடத்தல்கள் நடந்தவுடன் கியூ பிரிவும், அப்போதைய சென்னை மாநகரக் காவல் ஆணையாளர் தேவாரமும் இணைந்து, கடத்தி வைக்கப்பட்டிருந்தவர்களை மீட்டு, போராளிகள் சிலரைக் கைது செய்தோம்.
பல போராளிக் குழுக்கள் தங்கள் முகாமைச் சுற்றி இருக்கும் வீடுகளில் அரிசி மற்றும் வேறு தானியங்களைத் தானமாக வாங்கி உணவு உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள். இந்த நிலையை உணர்ந்த நான் உடனே பத்து மூட்டை அரிசியை வாங்கிஇ பட்டினி கிடக்கும் போராளிகளுக்கு வழங்கிவிட்டு, அரசுக்கு இது தொடர்பாக ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தேன். அந்த அறிக்கையை ஏற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, பொதுத்துறைச் செயலர் ஏ.எம்.சுவாமிநாதன் போராளிக் குழுக்களின் தலைவர்களை அழைத்து வரச் சொன்னார். அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனைச் சந்தித்துப் பேசச் சொன்னார். அமைச்சரும் முதல்வருக்குப் பரிந்துரை செய்து, அதன்பின்னர் அனைத்துப் போராளிக் குழு உறுப்பினர்களும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஆயிரம் ரூபாய் பெற்றுச் செல்லலாம் என்று முடிவானது. இதனால், பட்டினி கிடந்த போராளிகள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர். இது போராளிக் குழுக்கள் மத்தியில் எனது மரியாதையை உயர்த்தியது.
பிரபாகரனின் புஜத்தில் குத்திய எம்.ஜி.ஆர்!
இந்தக் காலகட்டத்தில் பிரபாகரன் தமிழ்நாட்டுக்கு வந்தார். அவரை எனது காரில் முதல்வர் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். அதற்கு முன் அவரிடம்இ துப்பாக்கி மற்றும் வேறு ஏதேனும் ஆயுதங்கள் வைத்துள்ளாரா என்று கேட்டேன். 'அண்ணாஇ என்னைச் சோதனை செய்துகொள்ளுங்கள்'' என்று தானே முன்வந்தார். அவரைச் சோதனை செய்தபின் முதல்வரின் ராமாபுரம் இல்லத்திற்கு அழைத்துச் சென்றேன். அங்கே முதல்வரின் மெய்க்காப்பாளர் ஆறுமுகமும் பிரபாகரனைச் சோதனை செய்தார். பின்னர்இ வரவேற்பு அறைக்கு பிரபாகரனை அழைத்துச் சென்றோம்.
முதல்வர் மின்தூக்கி வழியே கீழே வந்து அவரைச் சந்தித்தார். உணர்ச்சிகரமான சந்திப்பாய் இருந்தது. எம்.ஜி.ஆரைப் பார்த்து பிரபாகரன்இ ''உங்களது படங்கள்தான் எனக்கு முன்மாதிரி. அவற்றில் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்களோஇ அவற்றையே எனது இயக்கத்தின் கொள்கைகளாக பாவிக்கிறேன்'' என்று கூறினார். எம்.ஜி.ஆர் உடனே பிரபாகரனைக் கட்டிப்பிடித்துஇ அவரது வலது புஜத்தில் செல்லமாய் ஒரு குத்து விட்டார். உடனே பிரபாகரன் அடுத்த புஜத்தையும் காட்டிஇ 'இன்னும் ஒரு குத்து' என்று கேட்டவுடன் எம்.ஜி.ஆர் உருகிப்போனார்.
அதன்பிறகு எம்.ஜி.ஆரும் பிரபாகரனும் தனியே பதினைந்து நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். பிறகு பிரபாகரன் வெளியே வந்தார். எனது காரில் அவரது இல்லத்துக்குத் திரும்பினோம். அப்போது பிரபாகரன் என்னிடம்இ ''முதல்வரிடம் பண உதவி கேட்டேன்'' என்று கூறினார்.
ஒரு வாரத்தில் பொதுத்துறைச் செயலரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. 'எல்.டி.டி.இ அமைப்புக்குப் பொறுப்பானவர்கள் யாரையாவது அழைத்து வாருங்கள்'' என்று உத்தரவிட்டார். நான் கிட்டுவையும் அவருடன் இன்னொருவரையும் அழைத்துச் சென்றேன். நான்கு கோடி ரூபாய்க்கான காசோலையை அவர்களிடம் பொதுத்துறைச் செயலாளர் வழங்கினார். நான் அதைப் புகைப்படம் எடுத்தேன்.