Breaking News
யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!
யாழ். கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி.
யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!
யாழ். கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (05) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இறுதி யுத்தத்தின்போது மக்களின் உணவாக கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. அதன் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இனிமேலும் இவ்வாறானதொரு அவலம் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்தவும் இந்த கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.