கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி, அமைச்சர் விஜய் ஷா!
கர்னல் சோபியா குரேஷி பற்றி சர்ச்சைக்குரிய கருத்து! அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!

கர்னல் சோபியா குரேஷி குறித்து அமைச்சர் விஜய் ஷா தெரிவித்த கருத்து அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி, அமைச்சர் விஜய் ஷாவுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அமைச்சர் விஜய் ஷா மீது வழக்குப் பதிவு செய்ய மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் அதுல் ஸ்ரீதரன் மற்றும் நீதிபதி அனுராதா சுக்லா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், அமைச்சரின் சர்ச்சைக்குரிய பேச்சை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இது தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதிகள், மாலை 6 மணிக்குள் அவர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு டிஜிபிக்கு உத்தரவிட்டனர். அமைச்சர் விஜய் ஷா, பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய போது, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று குறிப்பிட்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ராணுவத்தில் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர் குறித்து அமைச்சர் விஜய் ஷா தெரிவித்த கருத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கர்னல் சோபியா குரேஷி குறித்து அமைச்சர் விஜய் ஷா தெரிவித்த கருத்து அரசியல் களத்திலும் சூடுபிடித்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி, அமைச்சர் விஜய் ஷாவுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
தனது பேச்சு குறித்து கண்டனங்கள் அதிகரித்து வருவதைக் கண்ட அமைச்சர் விஜய் ஷா, "பயங்கரவாதிகளுக்கு நமது பிரதமர் பதிலடி கொடுத்தது குறித்து பேசினேன். அதில் எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை" என்று விளக்கமளித்தார்.
கர்னல் சோபியா குரேஷி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவர் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள நௌகானில் தனது ஆரம்பக் கல்வியைப் பயின்றவர். சோபியா குரேஷியின் சகோதரர் பன்டி சுலைமான், "சோபியா என் சகோதரி, ஆனால் அதற்கு முன் அவர் இந்த நாட்டின் மகள். மத்தியப் பிரதேச அமைச்சரின் பேச்சு குறித்து பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
கர்னல் சோபியா குரைஷி குறித்து அமைச்சர் விஜய் ஷா தெரிவித்த கருத்து மிக மோசமானது என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்தியப் பிரதேச மாநில எதிர்க் கட்சித் தலைவர் உமாங் சிங்கர், "உயர் ராணுவ அதிகாரி குறித்து அமைச்சர் விஜய் ஷாவின் பேச்சு வெட்கக்கேடானது மட்டுமல்ல, அது ராணுவம் மற்றும் பெண்களை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, அமைச்சர் விஜய் ஷா உடனடியாக தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்" என்றார்.