Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

காசாவிலிருந்து மக்களை வெளியேற்றாமல் இரண்டு இலட்சம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் – அராபிய நாடுகளின் தலைவர்கள் இணக்கம்.

53 பில்லியன் டொலர் செலவில் இரண்டுலட்சம் வீடுகள்.

காசாவிலிருந்து மக்களை வெளியேற்றி அதனை புனர்நிர்மானம் செய்யும் அமெரிக்க ஜனாதிபதியின் திட்டத்திற்கு பதில் காசாவில் இரண்டுலட்சம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அராபிய தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

எகிப்திய தலைநகரில் இடம்பெற்ற அராபிய தலைவர்களின் உச்சி மாநாட்டில் இது குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

53 பில்லியன் டொலர் செலவில் இரண்டுலட்சம் வீடுகளை அமைக்கும் திட்டத்திற்கே அராபிய தலைவர்கள் இணக்கம்தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களை காசாவிலிருந்து வெளியேற்றாமல் காசாவை புனரமைக்கும்திட்டத்தினை அராபிய தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

எகிப்து இந்த திட்டத்தினை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது. எகிப்தின் திட்டம் தற்போது அராபிய திட்டம் என அராபிய லீக்கின் செயலாளர் நாயகம் அஹமட் அபொல் கெய்ட் தெரிவித்துள்ளார்.

அராபிய உலகை அச்சத்திற்குள்ளாக்கிய அமெரிக்க ஜனாதிபதியின் திட்டத்தினை எதிர்கொள்வதற்காக எகிப்து மரங்கள் நிறைந்த சுற்றுப்புறங்கள் மற்றும் பிரமாண்டமான பொதுகட்டிடங்கள்காணப்படும் காசாவை காண்பிக்கும் ; படங்களை உள்ளடக்கிய 91 பக்க வரைபடமொன்றை தயாரித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் இந்த திட்;டம் குறித்து விபரங்கள்; வெளியாகலாம் என டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

காசாவை புனரமைக்கும்திட்டத்தை முன்னெடுப்பதற்காக தொழில்நுட்ப வல்லுனர்களின் தற்காலிக குழுவொன்று நியமிக்கப்படலாம் என டெலிகிராவ் யுகே தெரிவித்துள்ளது.

ஹமாசினை இந்த குழுவிற்குள் உள்வாங்குவது குறித்து அராபிய தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை பாலஸ்தீன அதிகார சபையின் கீழ் இந்த நிபுணர்கள் குழு செயற்படும் என டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன அதிகாரசபை தற்போது மேற்குகரையை நிர்வகிப்பது குறிப்பிடத்தக்கது.

காசாவை அபிவிருத்தி செய்யும் திட்டம் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படும்.முதல் கட்டம் ஆரம்ப மீட்பு நிலை என அழைக்கப்படுகின்றது இந்த கட்டத்தில் முதல் ஆறு மாதங்களிற்கு காசாவில் உள்ள மிகப்பெருமளவு இடிபாடுகளையும் வெடிக்காதவெடிபொருட்களையும் அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

அடுத்த இரண்டு கட்டங்களும் பல வருடங்களிற்கு நீடிக்கும்,

இக்காலப்பகுதியில் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ள 15 மில்லியன் பாலஸ்தீனியர்கள் தற்காலிக கொள்களன்களில் குடியமர்த்தப்படுவார்கள்.