'லாபி' (Lobbying) என்ற பெயரில் இயங்கும் பெரும் நிறுவனங்களின் ஆதிக்கம்!
உலகில் நடக்கும் போர்கள், பெருந்தொற்றுக்கள், எண்ணை விலை அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடிகள் போன்றவற்றை உருவாக்குபவர்கள் யார்?
அமெரிக்கா உலகின் மிகப்பெரிய வல்லரசு என்று நாம் அறிவோம். ஆனால், அந்த வல்லரசின் முடிவுகளை எடுப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டும்தானா? உண்மையை ஆராய்ந்தால், வாஷிங்டனின் அதிகார மையங்களுக்குப் பின்னால் 'லாபி' (Lobbying) என்ற பெயரில் இயங்கும் பெரும் நிறுவனங்களின் ஆதிக்கம் இருப்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அமெரிக்காவில் 'லாபி' என்பது ஒரு தனி நபர் அல்லது ஒரு குழு (Lobbyists), அரசாங்கத்தின் கொள்கைகள், சட்டங்கள் மற்றும் முடிவுகளில் தங்களுக்குச் சாதகமான மாற்றங்களைக் கொண்டு வர உருவாக்கப்பட்ட அமைப்பு.
இதற்காக பெரும் நிறுவனங்கள் (Corporations) மற்றும் செல்வந்தர்கள் 'Political Action Committees' (PACs) மூலம் அரசியல்வாதிகளின் தேர்தல் பிரச்சாரங்களுக்குப் பெரும் நிதிகளை வாரி வழங்குகிறார்கள். லாபி செய்பவர்கள் பெரும்பாலும் முன்னாள் அரசியல்வாதிகள் அல்லது அதிகாரிகளாக இருப்பார்கள். இவர்கள் தற்போதைய சட்டம் இயற்றுபவர்களுக்குத் தேவையான தரவுகளையும், ஆலோசனைகளையும் வழங்கி அவர்கள் முடிவுகளை மாற்றுகிறார்களாக இருக்கும் சக்தி வாய்ந்த நபர்கள்.
உலக அரசியலைத் தீர்மானிப்பதில் சில குறிப்பிட்ட துறைகளின் லாபி குழுக்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
குறிப்பாக, ஆயுதம், மருந்து மற்றும் எண்ணெய் ஆகிய மூன்று துறைகளின் லாபிகள் உலக அரசியலையும், பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் தீர்மானிக்கின்றன. அமெரிக்கா உலகின் மிகப்பெரிய பொருளாதார மற்றும் இராணுவ சக்தியாக இருப்பதால், வாஷிங்டனில் எடுக்கப்படும் ஒரு சிறிய முடிவு கூட உலகின் ஏதோ ஒரு மூலையில் உள்ள சிறு நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம், உக்ரைன் போர் அல்லது சீனாவுடனான வர்த்தகப் போர் என எதுவாக இருந்தாலும், அதன் பின்னணியில் பெரும் லாபி குழுக்களின் அழுத்தம் இருக்கும். ஒரு நாட்டிற்கு எதிராகப் பொருளாதாரத் தடை (Sanctions) விதிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை அந்த நாட்டுடன் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களின் லாபி தீர்மானிக்கிறது. ஐநா சபை (UN), உலக வங்கி (World Bank) மற்றும் IMF போன்ற அமைப்புகளின் முடிவுகளில் அமெரிக்க லாபியின் நிழல் படிந்திருக்கும்.
இந்த மூன்று லாபிக்களும் உலகை எவ்வாறு கட்டுப்படுத்துகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
இந்த நிறுவனங்களின் வருமானம் பல சிறிய நாடுகளின் ஜிடிபி-யை (GDP) விட அதிகம். இதனால் உலக வங்கி மற்றும் IMF போன்ற அமைப்புகளில் பொருளாதார மேலாதிக்கம் காரணமாக இவர்கள் சொல்வதே சட்டமாகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல்களில் கோடிக்கணக்கான டாலர்களை நன்கொடையாக வழங்குவதன் மூலம், யார் ஆட்சிக்கு வந்தாலும் தங்களுக்குச் சாதகமாகச் செயல்பட வைக்கிறார்கள். பெரும் ஊடக நிறுவனங்களில் இவர்களது விளம்பரங்கள் மற்றும் முதலீடுகள் இருப்பதால், இவர்களுக்கு எதிரான செய்திகள் மக்கள் மத்தியில் சரிவரச் சென்றடைவதில்லை
முதலாவதாக ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் லாபி அதாவது Defense Lobbying பற்றி பார்ப்போம்.
இதனை Military-Industrial Complex என்று அழைக்கிறார்கள். போர் என்பது இவர்களுக்கு ஒரு வியாபாரம். அமைதியை விட பதற்றமான சூழலே ஆயுத விற்பனைக்கு உதவும் என்பது இவர்களின் வியாபார மந்திரம். எனவே, உலகமெல்லாம் இடம்பெறும் அனைத்து யுத்தங்களுக்கும் விதை போடுபவர்கள் இந்த லாபிக்களே. மத்திய கிழக்கு நாடுகள் அல்லது உக்ரைன் போன்ற பகுதிகளில் மோதல்கள் நீடிக்க இந்த லாபிகள் மறைமுகமாக அழுத்தம் கொடுக்கின்றன. சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்குப் பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசைச் சம்மதிக்க வைப்பது இவர்களின் வேலை.
பல நாடுகளில் நடக்கும் உள்நாட்டுப் போர்களும், எல்லை மோதல்களும் இந்த லாபிகளின் லாப வெறியால் தொடர்கின்றன.
அமெரிக்க அரசு மற்ற நாடுகளுக்கு வழங்கும் 'ராணுவ உதவி' என்பது உண்மையில் இந்த military industrial complex நிறுவனங்களின் ஆயுதங்களை விற்பதற்கான ஒரு Market Strategy ஆகும். அடுத்தது Oil Lobby.. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையையும் உலகப் பொருளாதாரத்தையும் தீர்மானிப்பதில் எரிசக்தி Lobby க்கு நிகர் ஏதுமில்லை. அமெரிக்காவின் 'எரிசக்தி Lobby ' என்பது உலகின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் (ExxonMobil, Chevron, Shell, BP, Koch Industries) கூட்டமைப்பாகும்.
உலகை அவர்கள் எவ்வாறு ஆட்டிப்படைக்கிறார்கள் என்றால்…
எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் அமெரிக்காவின் தலையீடு மற்றும் 'ஆட்சி மாற்றங்கள்' (Regime Change) பெரும்பாலும் இந்த நிறுவனங்களின் நலனுக்காகவே நடக்கின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் (ஈராக், லிபியா போன்றவை) அமெரிக்கா தலையிடுவதற்குப் பின்னால் இருக்கும் மிக முக்கியக் காரணி எண்ணெய் வளத்தைக் கையகப்படுத்துவதே ஆகும்.
தங்களுக்குச் சாதகமான ஆட்சியாளர்களை அந்த நாடுகளில் அமர்த்த இந்த லாபி பெரும் உள்ளடி வேலைகளில் ஈடுபடுகிறது.
தற்சமயம் இடம்பெறும் ஈரான் போர் கூட இவர்களால் Architect செய்யப்பட்டது.
பெட்ரோல் விலை உயர்வு முதல் சர்வதேசப் பொருளாதாரத் தடைகள் வரை அனைத்தும் இவர்களது லாபக் கணக்கைப் பொறுத்தே அமைகின்றன. மூன்றாவதாக உலகிலேயே மிக கொடிய மோசமான lobby என்றால் அது Big pharma Lobby என்பதில் சந்தேகமே இல்லை. அமெரிக்க அரசியலில் அதிக பணம் செலவழிக்கும் துறைகளில் முதன்மையானதாக Pharma lobby இருந்துவருகின்றது.
Pharma lobbyயில் இரண்டிற்கு மேற்பட்ட lobbyகள் இருக்கின்றன.
இவை வெறும் வணிக நிறுவனங்கள் அல்ல நாடுகளின் வெளியுறவுக் கொள்கையையும், மக்களின் உயிர்வாழும் உரிமையையும் தீர்மானிக்கும் சக்தியாக செயற்படுகிறது. மருந்து நிறுவனங்கள் தங்களின் லாபத்தைப் பாதுகாக்க அமெரிக்க அரசாங்கத்தின் மீது மிகப்பெரிய அழுத்தத்தைப் பிரயோகிக்கின்றன. ஏழை நாடுகளுக்குக் குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதைத் தடுக்க, சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களில் கடுமையான காப்புரிமை விதிகளைச் சேர்க்க அமெரிக்காவைப் பயன்படுத்துகின்றன.
அமெரிக்காவில் மருந்து விலைகளைக் குறைக்க விடாமல் தடுப்பதில் இந்த லாபி வெற்றி கண்டுள்ளது , இது உலகளாவிய மருந்து சந்தையிலும் விலையேற்றத்தை ஏற்படுத்துகிறது. FDA ( Food Drug Administration) போன்ற அமைப்புகளின் முடிவுகளில் தாக்கம் செலுத்தி, தங்களுக்குச் சாதகமான மருந்துகளை விரைவாகச் சந்தைக்குக் கொண்டு வரமுடிகிறது. உதாரணம்- கோவிட்-19 தடுப்பூசி விநியோகத்தின் போது, காப்புரிமையை விட்டுக்கொடுக்க மறுத்ததன் பின்னணியில் இந்த நிறுவனங்களின் லாபி வலுவாக இருந்தது.
இந்த மூன்று லாபிகளும் இணைந்து செயல்படும் விதம் (The Symbiosis) சுவாரஸ்யமானது.
Oil Lobby ஒரு நாட்டில் மோதலை உருவாக்கும், ஆயுத நிறுவனங்கள் அதற்குத் தேவையான தளவாடங்களை வழங்குகின்றன. போரினால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு மருந்து நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை (பெரும்பாலும் கடனுதவி அடிப்படையில்) விற்கின்றன. இதன் மூலம் கிடைக்கும் பில்லியன் கணக்கான டாலர்கள் மீண்டும் அமெரிக்கத் தேர்தல் நிதியாகச் சென்று, இந்தச் சுழற்சியைத் தொடரச் செய்கிறது.
இந்த மூன்று lobbyகளையும் கட்டுப்படுத்தும் ஒரு Lobby ஒன்று உள்ளது, அதன் பெயர் AIPAC எனப்படும் யூத லாபி .
Oil, Military மற்றும் big pharma போன்றனவற்றை கட்டுப்படுத்தும் ஒரேஒரு நிறுவனம் BlackRock. அந்த Black Rock நிறுவனத்தின் CEO வின் பெயர் Larry Fink. இந்த Larry Fink என்பவர் யூ*த Lobbyயான AIPAC ல் முக்கியமான ஒருவர்.
இப்பொழுது சொல்லுங்கள் ….
உலகில் நடக்கும் போர்கள், பெருந்தொற்றுக்கள், எண்ணை விலை அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடிகள் போன்றவற்றை உருவாக்குபவர்கள் யார் என்பது இப்பொழுதாவது புரிகிறதா?
பிரதி : கஸ்தூரி


