Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார் பொன்சேகா

.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

தனது X தளத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஜனாதிபதி பதவிக்கான எனது வேட்புமனுவை இலங்கை மக்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன்.

76 ஆண்டுகளாக, எங்களை திவாலாக்கும் நிலைக்குத் தள்ளிய ஒரு திறமையற்ற அரசியல் குழுவால் நாங்கள் வழிநடத்தப்பட்டோம்.

இலங்கை வளர்ச்சியடைய வேண்டுமானால் ஊழலை நசுக்க வேண்டும். வருமானத்தை அதிகரிக்க நமது இயற்கை வளங்களைப் பயன்படுத்த வேண்டும்.

2024 ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளராக இது எனது முறையான மற்றும் உத்தியோகபூர்வ அறிவிப்பு” என்று பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்ல ஒவ்வொரு இலங்கையர்களையும் தன்னுடன் இணையுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.