Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை கண்டுபிடிப்பு.

செவ்வாய் கிரகத்தில்கடற்கரை,

செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் விண்வெளி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை கண்டுபிடிப்பு | 3 Billion Year Old Beach Discovered On Mars

சூரியனை சுற்றி வந்து கொண்டிருக்கும் 9 கோள்களில், நாம் வாழும் பூமிக்கு அடுத்தபடியாக இருப்பது செவ்வாய். இந்த செவ்வாய் கிரகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு கியூரியா சிட்டி விண்கலத்தை இறக்கி ஆய்வு மேற்கொண்ட போது செவ்வாய் கிரகத்தில் 30 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய கரிமப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

மேலும், அடுத்த 20 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதேபோல், செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், அங்கு பூமத்திய ரேகைக்கு அடியில் தூசி நிறைந்த பனிக்கட்டிகள் இருப்பதை கண்டுபிடித்து தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது.

தற்போது, சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஜூராங் ரோவர் கருவி, அங்கு 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை படிமங்களை இருப்பதை கண்டறிந்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு தேவையான நீர், ஆக்சிஜன், மண் உள்ளிட்ட புவியியல் அமைப்புகள் இருக்கிறதா? என்ற ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை படிமம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, தண்ணீர் இருப்பதை மேலும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

ஆனால், இந்த கடல் நீர் பூமியில் உள்ளது போன்று உப்புத்தன்மை கொண்டதா?, அல்லது தண்ணீர் போன்று சுவையானதா? என்பது உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது.