Breaking News
குடியரசு தினத்தன்று லண்டன் இந்திய தூதரகத்தின் முன்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காலிஸ்தான் பிரிவினைவாதிகள்
,

குடியரசு தினமான ஜனவரி 26, 2025 அன்று லண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையரகத்திற்கு வெளியே காலிஸ்தான் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் தனி சீக்கிய நாடு கோரி, பஞ்சாபில் மனித உரிமை மீறல்களில் இந்திய அரசு ஈடுபட்டதாக அப்போது குற்றம் சாட்டினர். இந்த எதிர்ப்புக்கு பதிலடியாக, புலம்பெயர்ந்த இந்திய உறுப்பினர்கள் இந்திய மூவர்ணக் கொடியைக் காட்டி, பாரத் மாதா கி ஜெய் மற்றும் வந்தே மாதரம் போன்ற முழக்கங்களை எழுப்பி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.