படித்ததில் பிடித்தது! இளையராஜாவின் இரசிகனின் வாதம்!
இந்துத்துவ சாதி விரும்பிகளுக்கு க்களுக்கு இவ்வாறு சொல்வதிலே ஒருவிதமான கிளர்ச்சி கிடைத்துவிடுகிறது.
இளையராஜாவின் இரசிகனின் வாதம்!
நீண்ட காலமாக இங்கே ஒரு கூத்தைப் பார்க்கிறேன். இங்கே எல்லோரும் இளையராஜாவை 'கீழானவர், ஒடுக்கப்பட்டவர், பாதிக்கப்பட்டவர்,இரண்டாயிரம் வருஷமா தாழ்த்தப்பட்டவர் என சொல்கிறார்கள்.
இந்துத்துவ சாதி விரும்பிகளுக்கு க்களுக்கு இவ்வாறு சொல்வதிலே ஒருவிதமான கிளர்ச்சி கிடைத்துவிடுகிறது. ஒரு பொய்யைத் திரும்பத் திரும்ப சொல்வதால் அவர் தரப்பின் ஒரு சிறு கூட்டமும் இதை நம்ப தொடங்கியுள்ளது.ஆனால் இளையராஜா எங்கேயும்இ எப்போதும் தன்னை அவ்வாறு சொல்லிக் கொண்டதில்லை. மகள் இறந்துவிட்டார். மனைவி இறந்துவிட்டார். வயதாகிவிட்டது. 40 ஆண்டு கால இளமையை ஸ்டுடியோவிலே கழித்துவிட்டேன் என ஒரு நாளும் புலம்பியதில்லை.எதன் பொருட்டும் எவரிடத்திலும் கழிவிரக்கம் கோரியதில்லை. பரிதாபமும் அனுதாபமும் தேடியது இல்லை. எப்போதும் தன் பெயருக்கு ஏற்றார்ப்போல ராஜாவாக வாழ்கிறார்.
தன் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு மணியையும் ஒவ்வொரு நிமிடத்தையும் ஒவ்வொரு நொடியையும் அவரே அவரை செதுக்குகிறார்.எவரை நம்பியும் அவர் இல்லை. அவரை நம்பி தான் இங்கே அத்தனை பேரின் சுக துக்கங்கள் இருக்கின்றன. அவர் இல்லாது போனால் இங்கே பலர் பைத்தியகாரர்களாக திரிவார்கள். ஆனாலும் அவரை பார்த்து குரைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.ஆனாலும் இந்த மூடர்க்கூட்டத்தை அவர் ஒருநாளும் 'ச்சீ'என கீழிறங்கிக்கூட பார்த்ததில்லை.ஒரு பெருங்கூட்டமே தாழ்வு மனப்பான்மையில் மயங்கி கிடக்கையில் இளையராஜா அதிலிருந்து விடுபட்டிருக்கிறார். ''நான் எல்லோருக்கும் மேலானவன்''என கம்பீரமாக பிரகடனம் செய்திருக்கிறார்.இதை அவர் ஏதோ முட்டுச்சந்தில் நின்றுக்கொண்டு முழங்கவில்லை. இந்த நாட்டின் உச்சப்பட்ச அதிகார மையமான நீதிமன்றத்தில் சொல்லி இருக்கிறார். இதனை 'புரட்சிகர பிரகடனம்' என தைரியமாக சொல்லலாம்.
எந்த இடத்தில் தன்னை என்னவாக பிரகடனம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற பிரக்ஞை இளையராஜாவுக்கு இருப்பதை எண்ணி வியக்கிறேன். அவரது இத்தனை ஆண்டுகால மௌனம்இ எரிமலையைப் போல வெடித்திருக்கிறது.அவர் தரப்பின் இந்த பிரகடனத்தை உலக நீதிமன்ற வரலாற்றில் நிகழ்ந்த மிக முக்கியமான கதையாடலின் பட்டியலில் சேர்க்கலாம்.ஏனென்றால் ஏறக்குறைய அரைநூற்றாண்டாக ஒரு பெருங்கும்பல் அவரை 'கீழானவன்' என சொல்லிக்கொண்டு திரிகிறது. அவரது தரப்பும் அந்த பொய்யை நம்புகிறது எனும் போதும்இ அவர் அதனை ஒப்புக்கொள்ளவில்லை.ஒருவேளை அதனை ஒப்புக்கொண்டிருந்தால் அவருக்கு புகழ்ச்சி மிகுந்த சொற்கள் பரிசாக கிடைத்திருக்கும். அற்ப சுகங்களில் திளைப்பவனா ஞானி? எதை எங்கே சொல்ல வேண்டும் என ஞானிக்கு தெரியாதா? அதனாலே இளையராஜா பாரம்பரியமான மெட்ராஸ் ஐகோர்ட்டில்இ 'நான் எல்லோரை விடவும் மேலானவன்' என வாதிட்டு இருக்கிறார். அவரது துறையில் பிறரை விடவும் இளையராஜா மேலானவர் எனும் பொருளில் அவரது தரப்பு இந்த வாதத்தை முன்வைத்திருக்கிறது.
இந்த நாட்டில் எந்த கதையாடலும் அது நிகழ்த்தப்படும் இடத்துடன் முடிவதில்லை. நிகழ்ந்த காலத்துடனும் முடிவதில்லை. அது நிகழ்ந்த இடத்துக்கும் காலத்துக்கும் வெளியேயும் நீள்கிறது. ஒவ்வொரு இடத்துக்கும் அந்த கதையாடலின் பொருள் மாறுகிறது. அரசமைப்பின் மதிப்பீடுகளோடு பார்க்கையில் அவரது தரப்பின் வாதம் முரணைப் போல தெரியலாம். ஆனால் கலகக்காரனின் பார்வையில் ராஜாவின் வார்த்தைகள் பெரிய புரட்சி.அனைவரும் சமம் என அரசமைப்பு சொன்னாலும், இங்கே எவனும் அதனை கேட்பதில்லை. 'அவரை கீழானவர்' என சொன்ன போது வாயை மூடிக்கொண்டு இருந்தவர்கள். இப்போது அவர் தன்னை மேலானவர்' என சொல்லும் போதும் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்.
இளையராஜாவின் இந்த பிரகடனம் நூறாண்டுகளாக கோடிக்கணக்கானோர் மனதில் விதைக்கப்பட்ட தாழ்வு மனப்பான்மை எனும் உளவியல் நோயை ஒரு நொடியில் விரட்டுகிறது. இந்த காலத்தில் உடல் நோய்க்கு மருந்து கிடைத்துவிடுகிறது. உளநோய்க்கு தான் மருந்து தேவை. அந்த அருமருந்தை இளையராஜா தந்திருக்கிறார். ஆயிரம் நூல்களை படித்தாலும்இ நூறு சிறந்த உரைகளை கேட்டாலும் கிடைக்காத 'ஆத்ம பலம்' அவரது பிரகடனம் தந்துவிடுகிறது.இத்தகைய அணுகுமுறையையே பேரறிஞர் அம்பேத்கர் 'எதிர் புரட்சி' என்கிறார்.அரசியல்இ சமூகஇ பண்பாட்டு தளத்தில் இளையராஜா செய்த வெவ்வேறு எதிர்ப்புரட்சியைஇ உருவாக்கிய பெருமிதத்தைஇ செருக்கை புரிந்துக்கொள்ள இந்த சமூகத்துக்கு இன்னும் நிறைய காலம் தேவைப்படும்.
இளையராஜாவின் இரசிகன்