Breaking News
சரணடைய சொன்னார்கள், சரணடைந்தான்!... இன்று சர்வதேச சிறுவர்கள் தினம்.
.
இன்று சர்வதேச சிறுவர்கள் தினம்.
சரணடைய சொன்னார்கள், சரணடைந்தான். பெஞ்சில் உட்காரச் சொன்னார்கள், உட்கார்ந்தான். சாப்பிட பிஸ்கட் கொடுத்தார்கள் சாப்பிட்டான் அப்புறம் பார்த்தா சுட்டுக் கொன்றார்கள். இறந்துவிட்டான் ஒரு கேள்வி, இச் சிறுவனை ஏன் சுட்டுக் கொன்றார்கள் ? ஏனென்றால் இவன் அப்பா பயங்கரவாதியாம். எனவே இவனும் பயங்கரவாதி என்கிறார்கள் சரி. அப்படியென்றால் , ஜேவிபி விஜேயவீராவை பயங்கரவாதி என்று கொன்றபொழுது அவர் பிள்ளைகளை பயங்கரவாதி என்று ஏன் கொல்லவில்லை? ஏனென்றால் அவர் சிங்களவர். இப்போது புரிகிறதா ? நடந்தது இனப்படுகொலை என்று! இவ்வாறு இனப்படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களுக்குரிய நீதியை எப்போது பெற்றுக் கொடுக்கப் போகிறோம்? குறிப்பு – உயிரோடு இருந்திருந்தால் இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடியிருப்பான்.
- தோழர் பாலன்.