முகநூல் முத்தங்கள்! அங்கஜனாக வாழ்தல் என்பது பெரும் துயரமானது.
குத்துக்கரணம் அடித்து அடித்து முதுகுத் தண்டுவடம் பேர்ந்து போயிருக்கும்.
அங்கஜனாக வாழ்தல் என்பது பெரும் துயரமானது. குத்துக்கரணம் அடித்து அடித்து முதுகுத் தண்டுவடம் பேர்ந்து போயிருக்கும். ராஜபக்ஷக்களின் எடுபிடியாக ஆரம்பித்த அங்கஜனின் அரசியல் வாழ்வு, அவர்களுக்கே முதுகில் குத்தி மைத்திரியோடு ஓடியதோடு அடுத்த கட்டத்தைத் தொட்டது. மைத்திரி அதிகாரத்தை இழக்க நாமலின் பின்னால் தூங்கி, கனவு யாழுக்கு கோட்டாவைக் கொண்டு கோடு போடுவேன் என்றார்.
இதற்குள் பு*லி*க*ளி*ன் பாடல்களை இசைக்க விட்டு கூட்டம் நடத்தி, தேர்தலில் வென்றதும் 'பி*ர*பா மண்ணை வென்றுவிட்டோம்' என்ற அறைகூவல் வேறு விட்டு கெம்பினார்.
அரகலய காலத்தில் ராஜபக்ஷக்களைத் திட்டித் தீர்த்து, நல்ல பிள்ளை வேடம் போட்டு ஒதுங்கி, பின்னராக ரணிலோடு இணங்கினார். இந்த இணக்கம் பல ‘பார்’ போற்றும் பயன்களை அவருக்கு வழங்கியிருக்கின்றது.
இதற்குள் தம்மிக்க பெரேரா பக்கம் கரையொதுங்க எண்ணி அது சாத்தியமில்லாமல் போக, சஜித்தின் பின்னால் அலைந்து திரிந்து மீண்டும் மீண்டும் குத்துக்கரணங்கள்.
இப்போது இறுதியாக ரணிலின் மிரட்டலுக்கு பணிந்த அங்கஜன், அவரை ‘பார்’ போற்றும் தலைவனாக அறிவித்திருக்கிறார். இல்லையென்றால், 'பார்' போற்றும் ஆதாரங்கள் வெளிவரும் சாத்தியங்கள் உண்டு. ஏற்கனவே, சஜித் அணி மேடை தோறும் 'பார்' போற்றியவர்களின் விபரங்களை போட்டு நாறடித்துக் கொண்டிருக்கின்றது.
அங்கஜன் அண்ணனாக வாழ்வது எவ்வளவு பெரும் துயரோ, அதனைக் காட்டிலும் அவரின் யாழ். தம்பிகளாக வாழ்வது கொடும் துயரமானது. ஏனெனில், எந்தக் கணம் எங்கே தாவ வேண்டும் என்று விளிப்போடு இருக்க வேண்டும். இல்லையென்றால், விழும் அடி வேறு பலமாக இருக்கும்.