ஜேவிபி ஒரு அரைப்பாசிச, இனவாத அமைப்பு !
.

ஜேவிபி ஒரு அரைப்பாசிச, இனவாத அமைப்பு என்று முதன் முதலில் கூறியவர் தோழர் சண் அவர்களே.
(ஆதாரம் - தோழர் சண் எழுதிய 'ஒரு கம்யுனிச போராளியின் அரசியல் நினைவுகள்' நூல் பக்-332 )
சரி. யார் இந்த சண்? அவருக்கு இதைக்கூற என்ன தகுதி இருக்கு?
தோழர் சண் அவர்களின் தலைமையிலான கம்யுனிஸ்ட் கட்சியில் சேர்ந்து அதன் இளைஞர் பிரிவு தலைவராக இருந்தார் ரோகண விஜேயவீரா.
பின்னர் அதில் இருந்து விலகி ஜேவிபி கட்சியை ஆரம்பித்து அதன் தலைவராக இருந்தவர் ரோகண விஜேயவீரா.
ஜேவிபியின் முதல் கொழும்பு கூட்டத்திலேயே அதன் வகுப்பு வாதத்தை அம்பலப்படுத்தி சண் கட்சியின் தோழர்கள் துண்டு பிரசுரம் விநியோகித்தனர்.
பின்னர் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டபோது தோழர் சண் இவ்வாறு குறிப்பிடுகின்றார் இ
'பழைய இடதுசாரி கட்சிகள் இந்திய விஸ்தரிப்பு வாதத்தை எதிர்க்க தவறியதால் வகுப்புவாத அரை பாசிச ஜேவிபி சிங்கள இனத்தின் இரட்சகராகத் தோன்றி இந்திய விஸ்தரிப்பு வாதத்தை எதிர்த்தது. அரசாங்க எதிர்ப்புஇ தமிழர் எதிர்ப்புஇ இந்திய எதிர்ப்பு உணர்வுகளை ஜேவிபி நன்கு பயன்படுத்திக் கொண்டது'
ஜேவிபியை இனவாதக்கட்சி என்று கூறியவர் ரோகன விஜேயவீராவின் தலைவரான கம்யுனிஸ்ட் கட்சி சண்முகதாசனே.
எனவே தாம் தற்போது இனவாதக்கட்சி இல்லை என்றால் அதனை நிரூபிக்க வேண்டியது ஜேவிபியினரும் அவர்களுடைய தலைவர் ஜனாதிபதி அனுராவுமே.