Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தமிழர் பகுதிகளில் உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு

வலிந்துகாணமால் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா இலுப்பையடி பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சிவழங்கும் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது.

வலிந்துகாணமால் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா இலுப்பையடி பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சிவழங்கும் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது.

அத்தோடு கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழக, வவுனியா கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வவுனியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்றது.

தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியினை பரிமாறி தமிழ் மக்கள் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றினையும், வலிகளையும் இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாட்டினை குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

அந்தவகையில் இன்று காலை 11 மணியளவில் வவுனியா தபால் நிலையத்திற்கு முன்பாக குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வுகளில், பொதுமக்கள் பலர்  வருகைதந்து கஞ்சி அருந்தி சென்றமை குறிப்பிடத்தக்கது.

 அத்தோடு முல்லைத்தீவு   முள்ளியவளை  சந்தியம்மன் ஆலயம் முன்பாக முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களான ஞா.யூட்பிரசாத் மற்றும் த.அமலன், சமூக செயற்பாட்டாளர்கள், மக்கள்  இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி காச்சி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்

 

மேலும்  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வடமராட்சி கிளையினரின் ஏற்பாட்டில்  நெல்லியடி பேருந்து நிலையத்தில் வைத்து முள்ளிவாயக்கால் கஞ்சி காய்ச்சி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.