யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியில் இன்று (22) சர்வதேச சிறுவர் தின விழா!
.
யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியில் இன்று (22) சர்வதேச சிறுவர் தின விழா
ஆண்டுதோறும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி, சர்வதேச சிறுவர் தினத்துடன் இணைந்து, தொழில் திணைக்களத்தின், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரிவு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, இதன் கீழ், இன்று (22) யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியில் சர்வதேச சிறுவர் தின விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பாடசாலையின் தரம் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளில் படிக்கும் மாணவர்களினால் "குழந்தைகளாகிய எமது சிறுவர் உலகம்" என்ற தலைப்பில் ஒரு ஓவியத்தை உருவாக்கவும், குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட விழிப்புணர்வு நாடகத்தை வழங்க உள்ளனர்.
இதற்கு மேலதிகமாக, தொழில் திணைக்களம், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரிவு,
குழந்தைத் தொழிலாளர் அபாயம் அதிகமாக உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தின் இரண்டு பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கவும், மற்றும் காணொளியை திரையிடல் , குழந்தைத் தொழிலாளர் இல்லாத வேலை சூழலை உருவாக்குவது குறித்து தொழில்துறை துறையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர முதலாளிகளுக்கு அறிவை வழங்கவும் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்துள்ளது.
தொழில் அமைச்சு


