Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

எந்த ஒரு சதியாலும் தேர்தலை பிற்போட முடியாது – அநுர குமார

.

 

அரசியலமைப்புக்கு முரணாக எவ்வாறான சதிகளை மேற்கொண்டாலும், ஜனாதிபதித் தேர்தலைத் தடுக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புள்ளை பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
ஜனாதிபதித் தேர்தலைத் தடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல்வேறு வகையில் சூழ்ச்சியில் இறங்கியுள்ளதாக அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் சிலர் நீதிமன்றில் மனுக்களைத் தாக்கல் செய்கின்றனர். எவ்வாறாயினும் அனைத்து சதிகளும் தோற்கடிக்கப்பட்டு இறுதியில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற அறிவிப்பே வரும். எதிர்வரும் 17ஆம் திகதியுடன் தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும். அதன்பின்னர் வேட்பு மனுத்தாக்கலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும். அதன்பின்னர் ஐந்து அல்லது ஆறு வாரங்களில் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும். குறிப்பாக ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.