Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

தபேலா இசைமேதை சாகிர் ஹுசைன் அமெரிக்காவில் காலமானார்!

.

இந்திய பிரபல  தபேலா இசைமேதை சாகிர் ஹுசைன் அமெரிக்காவில் காலமானார். பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் ஹுசைன் (73) நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளுக்காக அமெரிக்கா, சென்பிரான்சிஸ்கோ உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சாகிர் ஹுசைன், அமெரிக்காவில் வசித்து வந்துள்ள நிலையில், அவருக்கு நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக சாகிர் ஹுசைன் மருத்துவமனையில் சிச்சை பெற்று வருவதாகவும், நேற்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சாகிர் ஹுசைன் சிகிச்சை பலனின்றி உயரிழிந்தார்.

இதுகுறித்து ஜாகிர் உசேனின் நண்பரும் புல்லாங்குழல் கலைஞருமான ராகேஷ் சௌராசியா இன்று தெரிவித்திருந்தார்.

இந்தியரான ஜாகிர் உசேன், அமெரிக்காவில் வசித்து வந்தார். அவருக்கு ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாக ஜாகிர் ஹுசைனுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்தது.

மேலும், கடந்த ஒரு வாரமாக ஜாகிர் உசேன் மருத்துவமனையில் சிச்சை பெற்று வருவதாகவும், இன்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

சாகிர் உடல்நிலை குறித்து அவரது நண்பர் ராகேஷ் கூறுகையில், "அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். தற்போது ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாங்கள் அனைவரும் அவரது நிலைமை குறித்து கவலைப்படுகிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஜாகிர் உசேன் சிகிச்சை பலனின்றி உயரிழிந்தார்.