க.பொ.தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, சிறந்த பெறுபேற்றை பெற்றவர்கள்.
,

2024 ஆம் ஆண்டு க.பொ.தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, சிறந்த பெறுபேற்றை பெற்றவர்களின் விபரங்களை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று (27) முற்பகல் அறிவித்தார்.
அதன்படி, உயிரியல் பிரிவில் குருநாகல் மலியதேவ மகளிர் வித்தியாலய மாணவி ஹேகொட ஆராச்சிகே சந்திதி நிம்ஹார நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
இதே பாடப் பிரிவில் இரண்டாம் இடத்தை அனுராதபுரம் மத்திய கல்லூரி மாணவி கல்பா விதுசரனியும், யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவி ஜமுனாநந்தா பிரணவன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
கணிதப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தை கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் லெசந்து ரன்சர குமாரகே என்ற மாணவரும், இரண்டாம் இடத்தை யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியின் கந்ததாசன் தசரத் என்பவரும், மூன்றாம் இடத்தை கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் மாணவன் தெவிந்து தில்மித் தஹநாயக்க என்பவரும் பெற்றுள்ளனர்.
கொழும்பு விசாகா கல்லூாியின் மாணவி கங்கானிகே அமாஷா துலாரி பெரேரா, வணிகப் பிரிவில் நாட்டிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
வணிகப் பிரிவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை கொழும்பு ரோயல் கல்லூரியைச் சேர்ந்த இந்துவர சன்ஹித குமாரபேலி என்பவரும் நுகேகொட சுஜாதா கல்லூரியின் லெசந்தி உதாரா பெரேரா என்பவரும் பிடித்துள்ளனர்.
அதேநேரம் ரத்னாவலி பாலிகா வித்யாலய மாணவி செனெலி சமத்கா ரணசிங்க, கலைப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். இரத்தினபுரி பர்கசன் உயர் மகளிர் கல்லூரி மாணவி தினெத்மி மெதன்கா ஜனகாந்த கலைப்பிரிவில் இரண்டாம் இடத்தையும், கண்டி மஹமாயா மகளிர் வித்தியாலய மாணவி இசுரி அஞ்சலிகா பீரிஸ் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
பொறியியல் தொழில்நுட்பவில் பிரிவில் முதலாம் இடத்தை நாரம்மல மயுரபாத மத்திய கல்லூரியின் மாணவன் காவ்ய ரவிஹங்சவும் இரண்டாம் இடத்தை இரத்தினபுரி சீவலி மத்திய மகா வித்தியாலயத்தின் மாணவன் உஷான் மலிக் ஜயசூரியவும் மூன்றாம் இடத்தை நாகஸ்தெணிய ஶ்ரீ சுமங்கல வித்தியாலயத்தின் பசிந்து மதுசங்கவும் பெற்றுள்ளனர்.