'ஓமம்' சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?.. சர்க்கரை நோய் பிரச்சனை வரவே வராதாம்!
.
உடல் எடையை கட்டுக்குள் வைக்க முயற்சிப்பவர்கள் தொடங்கி சர்க்கரை நோயாளிகள் வரை என பலரும் சப்பாத்தியை தேர்வு செய்து உட்கொண்டு வருகின்றனர். ஏன், பலரது வீடுகளில் இரவு உணவாக சப்பாத்தி தான் இருக்கிறது என்றால் மிகையில்லை. இப்படி இருக்க, சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறதளவு ஓமத்தை சேர்த்தால் பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக தெரியவந்துள்ளது. அதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஓமம் நன்மைகள்: ஹெர்பல் பொருட்களில் ஒன்றான ஓமம், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட்,சோடியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ்,புரதம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. கூடுதலாக, ஆன்டி ஸ்பாஸ்மோடிக், ஆன்டி மைக்ரோபியல் மற்றும் ஆன்டி ஹெபர்டென்சிவ், உள்ளிட்ட பல்வேறு சத்துக்களையும் ஓமம் கொண்டுள்ளது.
உடல் எடை அதிகம் கொண்ட பலரும் பலவீனமாக இருப்பதை நாம் பார்த்திருப்போம். அப்படிப்பட்டவர்கள் ஓமம் கலந்த சப்பாத்தி சாப்பிட்டு வரும் போது, உடல் எடை குறைவதோடு, எலும்புகள் வலுபெறும். ஓமத்தில் உள்ள தைமால், இதயத்தின் இரத்த நாளங்களில் கொழுப்புகள் நுழைவதைத் தடுப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
தைமால் மற்றும் பிற அத்தியாவசிய எண்ணெய்களின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக, ஓமம் பல் வலியுடன் தொடர்புடைய வலியைக் குறைக்க உதவும். தைமால் வாயில் பாக்டீரியா மற்றும் பூஞ்சையை எதிர்த்துப் போராடுவதன் மூலம் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
உடல் எடையை குறைக்க சப்பாத்தி சாப்பிடுவர்கள், சப்பாத்தி மாவுடன் சிறிதளவு ஓமம் கலந்து சாப்பிட்டு வரும் போது, உடலில் ஆங்காங்கே தேங்கியுள்ள கொழுப்புகள் குறையும். அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு ஓமம் சிறந்த தீர்வை தரும்.
ஓமத்தில் உள்ள பல அத்தியாவசிய எண்ணெய்கள், குறிப்பாக தைமால் மற்றும் கார்வாக்ரோல் ஆகியவை பாக்டீரியா மற்றும் பூஞ்சையின் வளர்ச்சியை எதிர்த்துப் போராட உதவும். சால்மோனெல்லா மற்றும் ஈ.கோலை போன்ற பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடவும் ஓமம் உதவுகின்றன.
சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு ஓமம் மருந்தாக இருக்கிறது. நேரடியாக ஓமம் சாப்பிடுவதை பலரும் விரும்பாத நிலையில் ஓமம் சேர்த்த சப்பாத்தி செய்து சாப்பிடலாம். அதுமட்டுமல்லாமல், பல் வலி முதல் சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஓமம் சிறந்த தீர்வாக இருக்கும். கூடுதலாக செரிமான கோளாறு, அசிடிட்டியை சீர் செய்ய ஓமம் உதவுகிறது.
சப்பாத்தி மாவில் ஓமம் சேர்த்து செய்வது எப்படி?: ஒரு அகல பாத்திரத்தில், கோதுமை மாவு சேர்க்கவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் ஓமம், 2 டீஸ்பூன் எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும். பின்னர், வழக்கமாக சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்தால் போதும். சப்பாத்தி சுட்டு சாப்பிடும் போது, மாவில் ஓமம் கலந்திருப்பது தெரியாது. ஆகையால் எப்போது சப்பாத்தி செய்தால், சிறதளவு ஓமம் சேர்த்து செய்து பாருங்கள்.