Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

2,000 எண்ணிக்கையிலான மருந்துகள், இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு வெறும் 750 ஆக குறைந்துள்ளது!

.

இலங்கையில் மருந்து இறக்குமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி!

இலங்கையில் கடந்த ஆண்டு சுமார் 2,000 எண்ணிக்கையிலான மருந்துகள், இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு வெறும் 750 ஆக குறைந்துள்ளது.இது, 62.5% குறைப்பைக் குறிக்கிறது. அதிகாரிகள் உரிய கொள்முதல் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதால், மருந்துகளை பெறுவதில் தாமதம் ஏற்படுவதே, இதற்கு காரணமாகும்.

மேலும் கொள்முதல் குழுக்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள புதிய அதிகாரிகள் நடைமுறை முடிவுகளை எடுக்கத் தயங்கி வருகின்றனர்.

இருப்பினும், மருத்துவ அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டபடி, தற்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் நிலைமை சமாளிக்கக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எனினும், கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது, காணப்பட்ட மோசமான நிலைமையை, மருந்துப் பற்றாக்குறை இன்னும் எட்டவில்லை.

இந் நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.