Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

50 வீதம் கிடைக்காவிட்டால் ஜனாதிபதியை தெரிவு செய்வது எப்படி?: திருவுளச்சீட்டுக்கு வாய்ப்பு இருக்குமா?

.

இலங்கைத் தீவில் கடந்த காலத்தில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வேட்பாளர்களே முன்னிலையாகயிருந்தனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வேட்பாளர்களே முன்னிலையாகியிருந்தாலும் ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டி பிரதான இரு வேட்பாளர்களுக்கு இடையிலேயே காணப்பட்டது.

மூன்றாவது இடத்தை பெற்றுக்கொண்ட வேட்பாளருக்கு பிரதான இரு வேட்பாளர்கள் பெற்றுக்கொண்ட வாக்கு வீதத்துக்கு அருகிலும் கூட வர முடியாத சூழ்நிலையே கடந்த பல தசாப்தங்களாக நிலவியது.

ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்கு வீதத்தை பெற்றுக் கொள்ளும் வேட்பாளரை வெற்றியாளர் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும்.

எனினும், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னிலையாகும் வேட்பாளர்கள் எவருக்கும் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்கு வீதத்தை பெற முடியவில்லை எனில் வெற்றியாளரை தேரந்தெடுக்கும் விதம் சற்று சிக்கலாகும்.

அதன்போது, தேர்தல் அதிகாரிகள் மூலம் வாக்களார்கள் தெரிவு செய்த இரண்டாவது மற்றும் மூன்றாவது வெற்றியாளரை தெரிவு செய்ய எண்ணிக்கை இடம்பெறும்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியாளரை தெரிவு செய்வதற்கான வழிமுறைகள் இவையே என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய மற்றும் அதன் முன்னாள் உறுப்பினர் எம்.எம்.மொஹம்மட் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது விருப்ப வாக்குமூலம் ஜனாதிபதியை தெரிவுசெய்ய முடியாவிடின் திருவுளச்சீட்டு முறை பயன்படுத்தப்படும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.