Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல்- சுமந்திரனின் வாக்குறுதி தொடர்பில் தவராசா வேண்டுகோள்..!

.

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனம் தொடர்பில் சுமந்திரன் தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதியை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென சுயேச்சைக் குழு 14 இல் போட்டியிட்ட, சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுத்தேர்தலில் எம்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த 7 ஆயிரத்து 496 வாக்காளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பொதுத்தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் மிகக் குறுகிய காலத்திலேயே சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

வெறும் மூன்று வார அவகாசத்துக்குள் நாம் தேர்தலை எதிர்கொண்டோம்.  இந்த மூன்று வாரத்துக்குள் எம்மீது நம்பிக்கை வைத்து 7 ஆயிரத்து 496 பேர் வாக்களித்திருக்கின்றனர். 

உண்மையில் இதை நாம் பெரியதொரு அடைவாகக் கருதுகின்றோம். 

தமிழ்த் தேசியத்தின் பாதையில், தமிழ் மக்களின் இறுதி நம்பிக்கையாகப் பயணிக்க வேண்டும் என்றே எமது கட்சி உருவாக்கப்பட்டது. 

அந்தத் தடம் மாறாத பாதையில் எங்களின் அரசியல் பயணம் தொடரும்.

தமிழரசுக் கட்சிக்கு மக்கள் தக்க செய்தியொன்றை சொல்லியிருக்கின்றனர். 

தமிழரசுக் கட்சியினர் மக்களின் ஆணையை ஏற்று அதன்படி நடக்க வேண்டும். 

சுமந்திரன் எனது நீண்ட கால நண்பர். நன்கு பழக்கப்பட்டவர்.  அவர் கொடுத்த வாக்குறுதியை ஒரு போதும் மீறியதில்லை. தேர்தலுக்கு முன்பாக, வேட்பாளர்களாகப் போட்டியிட்டுத் தேர்தலில் தோல்வியடைபவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமில்லை என்று அவர் கூறியிருந்தார். 

எனவே, தன் வாக்குறுதியை அவர் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்தார்.