Breaking News
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும்!
.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானம் தொடர்பான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா தெரிவித்தார்.
யாழில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார்.
அதேவேளை தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் பொருட்டு அம்பாறை மற்றும் திருகோணமலையில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் இணைந்து போட்டியிட முடியும் என தெரிவித்தார்.