ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததா ஜேவிபி?: செய்தி வெளியிட்ட சிலுமின
.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்கவை இலக்கு வைத்து ஜேவிபியின் மத்திய குழு உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான வசந்த சமரசிங்க கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக சிங்கள வாரஇறுதி ஞாயிறு சிலுமின பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.
வசந்த சமரசிங்க விடுத்த கொலை மிரட்டல் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருவதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தலின் மூலம் இந்த கொடுக்கல் வாங்கலை காப்பாற்றிக் கொள்வதாகவும் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல விட மாட்டோம் எனவும் மறைவதற்கு ஒரு இடமும் கிடைக்காது. அப்படி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றால் அங்கும் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் அதிகமாக இருப்பதாக வசந்த சமரசிங்கவின் மிரட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அப்பத்திரிகை தெரிவிக்கின்றது.
இலங்கை மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்துள்ளதால் இவ்வாறு மிரட்டல் விடுத்துள்ளதாகவும் செய்தி தெரிவிக்கின்றது.
“ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு ஜேவிபியால் கொலை மிரட்டல்” என்ற தலைப்பில் பத்திரிகையின் முதற் பக்கத்தில் இந்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள இந்த செய்தியில், எந்தவொரு இடத்திலும் இவ்விடயம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக குறிப்பிடப்படவில்லை.
சட்டத்தில் குறைந்தபட்ச தலையீடு செய்து பொலிஸாரிடம் கூட தாக்கல் செய்யப்படாத விடயம் குறித்து சிலுமின பத்திரிகை செய்தி வெளியிடுவது கேள்வியை எழுப்பியுள்ளது.