Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பள அதிகரிப்பு குறித்து அரச வர்த்தமானி.

கம்பனியின் முதன்மை இயக்குனர் மீது சட்டநடவடிக்கை; செந்தில் தொண்டமான் எச்சரிக்கை!

கம்பனியின் முதன்மை இயக்குனர் மீது சட்டநடவடிக்கை; செந்தில் தொண்டமான் எச்சரிக்கை!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பள அதிகரிப்பு குறித்து அரச வர்த்தமானி. வெளியிடப்பட்டதையடுத்து, பெருந்தோட்ட நிறுவனங்கள் அதை வழங்க மறுப்பு தெரிவித்துவரும் நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் கம்பனிகளுடன் எந்தவித சமரசமும் கிடையாது என
ஊடகங்களுக்கு திட்டவட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடக பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தோட்ட தொழிலாளர்களுக்கு 1200 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்ததயடுத்து, அதற்கு மறுப்பு தெரிவித்துஇ செந்தில் தொண்டமான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த பொழுது சம்பள உயர்வு வழங்க முடியாது என ஆரம்பத்தில் கம்பனிகள் தெரிவித்து வந்தன. கடும் அழுத்தத்திற்கு பிறகு ஊக்குவிப்பு தொகை மாத்திரம் வழங்க தயார் என தெரிவித்தனர்.

இந்நிலையில், அரச வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதை அடுத்து, வேறு வழியின்றி தற்போது கம்பனிகள் 1200 ரூபா அடிப்படை சம்பளம்
வழங்க முன்வந்துள்ளனர்.

ஒரு வருட காலமாக ஒரு ரூபாய் சம்பள உயர்வு கூட வழங்க முடியாது என தெரிவித்த கம்பனி, தற்போது 200 ரூபாய் அதிகரிப்பு வழங்க முன்வந்தமைக்கான காரணம் அரசாங்கத்தால் அரச வர்த்தமானி வெளியிடுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

ஆதலால் கம்பனிகளுடன் எவ்வித சமரசமும் கிடையாது என செந்தில் தொண்டமான் தெரிவித்ததுடன், அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை கம்பனி அமுல்படுத்தாவிடின் கம்பனியின் முதன்மை இயக்குனர் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும், என செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.