Breaking News
ஜனாதிபதி, பசில் சந்திப்பு விரைவில்
எதிர்வரும் 23ம் திகதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
ஜனாதிபதி, பசில் சந்திப்பு விரைவில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் எதிர்வரும் 23ம் திகதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
எதிர்வரும் தேர்தல்கள் உள்ளிட்ட சில முக்கியமான விடயங்கள் தொடர்பில் இந்த பேச்சுவார்த்தைகளின் போது கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே இவ்வாறான மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.