Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக சமூக வலைத்தளங்கள்

இன்று பாராளுமன்றம் கலைக்கப்படுமா?

இன்று பாராளுமன்றம் கலைக்கப்படுமா?

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றத்தை இன்று திங்கட்கிழமை (29) கலைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.எவ்வாறாயினும், இந்த விவாதங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியாகும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் இடம்பெற்ற அவசர சந்திப்பின் பின்னணியிலேயே இவ்வாறான தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்தக் கலந்துரையாடலில், இந்நாட்டின் அரசியல் நிலவரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் பல சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.

முதற்கட்டமாக பாராளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இதேவேளை, எதிர்வரும் ஜூலை மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட வாய்ப்புள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், அரசியலமைப்பு ரீதியாக, ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை நடத்தப்பட வேண்டும்.அதற்கு முன்னதாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.