Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

வெளிப்புற பொறிமுறையை திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – மனித உரிமை பேரவை தீர்மானத்தை நிராகரித்தது இலங்கை

.

எந்தவொரு இறையாண்மையுள்ள அரசாலும்   ;  அதன் அரசமைப்பிற்கு முரணான மற்றும் அதன் உள்நாட்டு சட்ட செயல்முறைகளின் அர்ப்பணிப்பை முன்கூட்டியே தீர்மானிக்கும் வெளிப்புற பொறிமுறையை கட்டாயமாக திணிக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில் இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

குறிப்பிட்ட தீர்மானத்தின்[57/L.1] நகல்வடிவம் ஐக்கி;ய நாடுகள் தீர்மானத்தின் மூலம்

வழங்கப்பட்ட ஆணையை மேலும் நீடிக்கின்றது.

மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்மானத்தையும் 51/1அதற்கு முந்தைய தீர்மானத்தையும் 46/1

இலங்கை நிராகரித்துள்ளது இந்த தீர்மானத்தின் மூலமேஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்குள் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை ஏற்படுத்தப்பட்டது.

நாங்கள்  ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையிலிருந்து எங்களை விலக்கிக்கொள்கின்றோம்;- அதற்கான காரணங்களை ஏற்கனவே சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளோம்.

தொடர்புபட்ட நாடு என்ற அடிப்படையில் இலங்கையின் சம்மதம் இன்றியே  51/1 தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது.வாக்கெடுப்பின் போது உலக நாடுகள் அந்த தீர்மானம் குறித்து பிளவுபட்டிருப்பது வெளிப்பட்டது.

இதன் காரணமாக அந்த  51/1  தீர்மானத்தின் மூலம் வழங்கப்பட்ட ஆணையை மேலும் நீடிக்கும் தீர்மானம் மனித உரிமை பேரவையின் பொது உடன்பாடு அற்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்குள் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை ஏற்படுத்துவது முன்னர் ஒருபோதும் இடம்பெறாத விடயம்.

எந்தவொரு இறையாண்மையுள்ள அரசாலும்  அதன் அரசமைப்பிற்கு முரணான மற்றும் அதன் உள்நாட்டு சட்ட செயல்முறைகளின் அர்ப்பணிப்பை முன்கூட்டியே தீர்மானிக்கும் வெளிப்புற பொறிமுறையை கட்டாயமாக திணிக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.