Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இத்தாலியப் பெண்ணை பலாத்காரமாக காரில் ஏற்ற முயன்ற தேரர்

.

இத்தாலியப் பெண் ஒருவரை பலாத்காரமாக காரில் ஏற்ற முயன்ற தேரர் ஒருவர் மீது அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

இத்தாலியப் பெண் நேற்று (06) அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள ருவன்வெலிசாய விகாரைக்கு சென்றுள்ளார்.

இதன்போது, அங்கிருந்த தேரர் இத்தாலியப் பெண்ணிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் இத்தாலியப் பெண்ணின் வட்ஸ்அப் இலக்கத்தைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்த சென்றுள்ளார்.

பின்னர், சிறுது நேரம் கழித்து தேரர் இத்தாலியப் பெண்ணின் வட்ஸ்அப் இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தன்னை சந்திப்பதற்கு வருமாறு கூறியுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த இத்தாலியப் பெண் தனது ஹோட்டல் நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கும் போது காரில் வந்த தேரர் இத்தாலியப் பெண்ணை காரில் ஏறுமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதன்போது, இந்த காரின் சாரதியும் காரில் ஏறுமாறு அச்சுறுத்தியநிலையில், இத்தாலிய பெண் அருகில் இருந்த கடை ஒன்றிற்குள் தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட இத்தாலிய பெண் இது தொடர்பில் அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.