பெரும்பான்மை தமிழ் மக்களால் ஏற்று கொள்ளப்பட்ட கட்சி எது ?
வடகிழக்கு மாகாணங்கள் சுமார் 25 லட்சம் மக்களை கொண்ட மாகாணங்களாகும். இங்கே தமிழர்களும் சிங்களவர்களும் முஸ்லிம்களும் வாழ்கின்றார்கள்
பெரும்பான்மை தமிழ் மக்களால் ஏற்று கொள்ளப்பட்ட கட்சி எது ?
எந்த ஒரு ஒரு வெகுசன ஸ்தாபனமும் தனது மக்கள் நலன் குறித்த தனது இலக்கை அடைவதற்கு அந்த மக்களிடையே இருந்து தனது அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்கு, பெரும்பான்மையான மக்களின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும், பெரும்பான்மையான மக்களின் ஆதரவை பெறாத எந்த ஒரு ஸ்தாபனமும் ஓட்டு மொத்த மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தன்மையை உடையவர்கள் என்று நாம் கருத முடியாது ..
ஜனநாயக முறையில் இந்த ஸ்தாபனங்களுக்கு உள்ள அங்கீகாரத்தை அறிவதற்கு தேர்தல் வாக்களிப்பு ஒரு காரணியாக அமைகின்றது இன்று தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் கட்சிகளுக்கு கடைசி பொது தேர்தலின் போது கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் பார்ப்போமானால் வடகிழக்கு மாகாணங்கள் சுமார் 25 லட்சம் மக்களை கொண்ட மாகாணங்களாகும். இங்கே தமிழர்களும் சிங்களவர்களும் முஸ்லிம்களும் வாழ்கின்றார்கள்
தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுக் கொண்ட வாக்குகள் 3,27168
தமிழ் தேசிய மக்கள் முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகள் 67,768
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பெற்றுக் கொண்ட பாக்குகள் 67692
கீழ மக்கள் ஜனநாயக கட்சி பெற்றுக் கொண்ட வாக்குகள் 61,464
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி பெற்றுக் கொண்ட வாக்குகள் 51,301
இங்கே போட்டியிட்ட முஸ்லிம் கட்சிகள் சிங்கள கட்சிகளின் வாக்குகளை நாம் கணக்கில் எடுக்கவில்லை பெரும்பான்மையான மக்களின் ஆதரவை பெற்ற தனி தமிழ் கட்சியில் என்றால் இங்கு எதுவுமே இல்லை .
இந்த நிலையில் தமிழ் மக்களால் எதைத்தான் பெற்றுக் கொள்ள முடியும் மறுபக்கம் பார்த்தால் இந்த கட்சிகளை தலைமை தாங்குபவர்கள் தமிழ் மக்களின் சாபக்கேடா? எனவே கேட்க வேண்டியுள்ளது தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்து யாருடன் பேசி முடிவெடுப்பது இந்த நிலையை மக்களுக்கு புரிய வேண்டியது ஊடகங்களின் கடமையாகிறது.
இதுதான் இன்றைய யதார்த்தம் "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு அன்றேல் அனைவருக்கும் தாழ்வு"