ரணிலின் சுழலில் சிக்குண்டுள்ள சஜித்: அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்
.
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் ஐக்கிய மக்கள் சக்தியில் ஒவ்வொருவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதுவரை 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி ரணிலுடன் கைகோர்த்துள்ளனர். தலதா அத்துகோரள தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன், விரைவில் ரணிலுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து மேலும் இருவர் ரணிலுக்கு ஆதரவளிக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவிந்த ஜயவர்தன, அஜித் மானப்பெரும ஆகிய இருவரே இவ்வாறு ரணில் பக்கம் தாவ உள்ளதாக தெரியவருகிறது.
சஜித் பிரேமதாசவை ஆதரித்து கட்டான பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் அஜித் மானப்பெரும கலந்துகொள்ளவில்லை என்பதுடன், காவிந்த ஜயவர்தன கூட்டத்தின் இறுதி நேரத்திலேயே சமூகமளித்துள்ளார்.
இதனால், இவர்கள் இருவரும் ரணில் பக்கம் செல்லக்கூடும் சஜித் பிரேமதாசவுக்கு கட்சியின் உயர்மட்டத்தால் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரணிலின் நகர்வுகளால் சஜித் தடுமாற்றம் அடைந்துள்ளதாகவும் அறிய முடிகிறது.