Breaking News
சஜித்தின் புதிய அணுகுமுறை: கட்சிக்குள் அதிருப்தி!
.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி, நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை நியமிக்கும் நெருக்கடியை தீர்க்க புதிய அணுகுமுறை ஒன்றைக் கையாண்டுள்ளது.
நடிகையும் , அரசியல் செயற்பாட்டாளாருமான தமிதா அபேரத்னவை இரத்தினபுரி மாவட்டத்தில் முன்னிலைப்படுத்தவுள்ள நிலையில், இதுவரையில் அம் மாவட்டத்தில் பிரதானியாக செயற்பட்டு வந்த ஹேஷா விதானகே அதற்கு அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் வேட்புமனுவை வழங்கியமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தமிதா அபேரத்ன உறுதிப்படுத்தினார்.
ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள் எழுந்துள்ள வேட்புமனு தொடர்பான சிக்கல்களை தீர்ப்பதற்காக தற்போது குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.