Breaking News
வாக்களிப்பு நிலையம் அமைப்பதில் சிக்கல்: அதிகரித்த நாட்சம்பளம்
.
வாக்களிப்பு நிலையத்தை அமைக்கும் போது தேவையான பணியாளர்கள் மற்றும் வசதிகளை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம சேவை அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த தேர்தலை விட இம்முறை ஊழியர் ஒருவருக்கு வழங்கப்படும் தினப்படி 3 மடங்கு அதிகரித்துள்ளதாக, அகில இலங்கை சுதந்திர கிராம சேவை அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயளாலர் ஜகத் சந்திரலால் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வாக்களிப்பு நிலையத்தை அமைக்கத் தேவையான போதிய தினப்படியை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பொதுச் செயளாலர் ஜகத் சந்திரலால் குறிப்பிட்டுள்ளார்.