Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

தமிழ் இனப்படுகொலை கல்விவாரம்! தொடரும் தமிழ் இனப்படுகொலை குறித்து சிந்திப்பதற்கும், பொதுமக்கள் அறியவும் சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களிற்கு உணவும் மருந்தும் மறுக்கப்பட்டமை,பாலியல் வன்முறைகள் கொலைகள், கடத்தல்கள் கொத்துக்குண்டுகள் குறித்த தெளிவான நினைவுகளுடன் நாங்கள் விடப்பட்டுள்ளோம்.

தமிழ் இனப்படுகொலை கல்விவாரம் தொடரும் தமிழ் இனப்படுகொலை குறித்து சிந்திப்பதற்கும், அது பற்றி பொதுமக்களிற்கு போதிப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது என ஒன்ராறியோவின் சுகாதார அமைச்சின் உளநலத்துறை இணை அமைச்சரும், ஸ்காபரோ றூஜ் பார்க் தொகுதிக்கான மாநில சட்டமன்ற உறுப்பினருமான விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் இனப்படுகொலை வாரம் குறித்த தனது சமூக ஊடகபதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இந்த வாரம் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் , நான்கு வருடங்களிற்கு முன்னர் ஒன்டாறியோவில் தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த வாரம் முழுவதும் தமிழ்சமூகத்தினரும் இளைஞர்களும் தமிழ் இனப்படுகொலையில் உயிர்பிழைத்தவர்களின் கதைகளை பகிர்ந்துகொள்வார்கள்.மேலும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அனுபவிக்கும் தலைமுறைகளிற்கு இடையிலான மனஉளைச்சல் குறித்து அறிந்துகொள்வார்கள்.

இனப்படுகொலை என்பது ஒரு நிகழ்;வால் குறிக்கப்படவில்லை.அது ஒரு செயல்முறை,ஒரு குழுவினரான மக்களை ,ஒழித்து அழிக்க அரசு தொடர்ந்து செய்யும்,தொடர்ச்சியான நடவடிக்கைகளின் வடிவம். மே2009ம் ஆண்டு தமிழர் இனப்படுகொலையின் உச்சமாக குறிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களிற்கு உணவும் மருந்தும் மறுக்கப்பட்டமை,பாலியல் வன்முறைகள் கொலைகள், கடத்தல்கள் கொத்துக்குண்டுகள் குறித்த தெளிவான நினைவுகளுடன் நாங்கள் விடப்பட்டுள்ளோம்.

தமிழ் மக்களிற்கு எதிரான இனப்படுகொலை இன்னமும் தொடர்க்கின்றது,167,796 பேருக்கு என்ன நடந்தது என்பது தெரியாத நிலை தொடர்கின்றது.

தமிழ் இனப்படுகொலை கல்விவாரத்தை அங்கீகரிப்பது ,நீடிக்கும் தமிழ் இனப்படுகொலை குறித்து சிந்திப்பதற்கும், அது பற்றி பொதுமக்களிற்கு போதிப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்கும்.