Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இலங்கைக்கான நோர்வே தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று டிசம்பர் 20 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

வறுமை ஒழிப்பு, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள், வரி சீர்திருத்தங்கள், மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் கல்வி முறைமையை மறுசீரமைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், மிகவும் பயனுள்ள மற்றும் வினைத்திறனான அரச சேவைக்காக நிர்வாக முறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்தும் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஷோபினி குணசேகர மற்றும் நோர்வே தூதரக அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.