Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

வே.பிரபாகரன் அவர்கள் வாழ்ந்த வீட்டின் காணி திட்ட விவாதம்! - யாழ் வடமராட்சியில் ஊடகவியலாளர் சந்திப்பு.

வே.பிரபாகரன் அவர்கள் 13 வயது வரை வாழ்ந்த வீட்டின் காணியின் உரிமையாளரான ம. ஜெகதீஸ்வரி, பயனுள்ள கட்டிடம் அமைக்க மற்றும் சட்டபூர்வ அனுமதி பெறத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில், சபாரத்தினம் செல்வேந்திரா சாட்டட் எக்கவுண்டன், வல்வை பிரஜைகள் குழு தலைவர், வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் நகரபிதா நடராஜா அனந்தராஜ், பிரதி கல்விப் பணிப்பாளர் மற்றும் வல்வை பிரஜைகள் குழு செயலாளர் ஆகியோர் கலந்து கருத்து தெரிவித்தனர்.

சந்திப்பில், வல்வெட்டித்துறையில் வே.பிரபாகரன் அவர்கள் 13 வயது வரை வாழ்ந்த வீட்டின் காணி தொடர்பான திட்டங்கள் விவாதிக்கப்பட்டது. காணியின் உரிமையாளரான  ம. ஜெகதீஸ்வரி, இக் காணியில் புதிய, பயனுள்ள கட்டிடம் அமைக்க மற்றும் சட்டபூர்வ அனுமதி பெறத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

புதிய கட்டிடத்தில் உள்ளடக்கப்படவுள்ளவை:
உள்ளூர் கலைஞர்களின் திறனை வெளிப்படுத்தும் வகையில் கீழ்த்தளத்தில் உள்ள கலைக்கூடம், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆராய்ச்சி, கல்வி தேவைகளுக்கு பயன்படும் வசதியுடன் முதலாம் மாடியில் தரமான நூலகம், 
இரண்டாம் மற்றும் மூன்றாம் மாடிகளில் வரலாற்றுக் காட்சிக்கூடங்கள், தமிழர்களின் பாரம்பரியங்களை எதிர்கால சந்ததியினருக்கு அறியவும்.மாணவர்களுக்கு இலவச கருத்தரங்குகள் மற்றும் கல்வி, கலை, ஆன்மீகத்துறையில் தலைமைத்துவக் பயிற்சிகள்.

03.12.2025 அன்று நகரசபையில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது, ஆனால் 60 நாட்களுக்கு மேலாக எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. 
30.01.2026 அன்று நடைபெற்ற நகரசபைக் கூட்டத்தில், பழைய வீட்டின் நினைவுச் சின்னத்துடன் ஒப்பிடும் புதிய கட்டிடத்தை கட்டவேண்டும் என்ற கருத்து சரியான முறையில் பரிசீலிக்கப்படாமல், குழப்பமான பிரச்சாரம் எழுந்தது.

உலகம் முழுவதும் முக்கிய முன்னோடிகளின் வீடுகள் பாதுகாக்கப்படுவதைப் போலவே, வே.பிரபாகரன்  வாழ்ந்த வீடும் நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட வேண்டும். சேக்ஸ்பியர் மற்றும் பாரதியார் வீடுகள் இன்னும் அத்தகைய முறையில் பராமரிக்கப்படுகின்றன.
ஆனால், பிரபாகரன் அவர்களின் பழைய வீடு இராணுவத்தால் இடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. புதிய கட்டிடத்தை அதேபோல் கட்டுவதை ஊடகங்கள் தவறாக விளக்கி, மக்களை குழப்பி வருகின்றன.

தமிழர் வரலாற்று மையம், காணி உரிமையாளர்களின் விருப்பத்தை முன்னிலைப்படுத்தி, சட்டபூர்வமாக, வெளிப்படை முறையில் கட்டிட திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. திட்டத்தின் மொத்த செலவு சுமார் 70 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. 
தமிழ்மக்கள் அனைவரும் இதற்கான வரலாற்றுக் கடமையை உணர்ந்து முழுமையான ஆதரவுடன் செயல்படுமாறு ந. அனந்தராஜ், அற்றோர்ணி தத்துவகாரர்வேண்டிக் கூறியுள்ளார்.