Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கதிர்காம பாத யாத்திரைக்காக குமண நுழைவாயில் இன்று திறப்பு

.

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம ஆலயத் திருவிழா ஜூன் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், கதிர்காம பாத யாத்திரை பருவத்திற்கான ஆயத்தமாக, யால தேசிய பூங்காவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குமண நுழைவாயில் இன்று (20) திறக்கப்பட உள்ளது.

பக்தர்கள் கதிர்காமத்தை அடைய குமண மற்றும் யால தேசிய பூங்காக்களுக்கு இடையில் பல்வேறு நிலப்பரப்புகள் மற்றும் வனவிலங்குகள் வசிக்கும் பகுதிகள் வழியாக 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் பயணிக்கின்றனர்.

உகந்தையில் இருந்து யால வழியாக கதிர்காமம் வரையிலான யாத்திரையை எளிதாக்கும் வகையில் குமண நுழைவாயில் இரண்டு வாரங்களுக்கு திறந்திருக்கும் என்று தேசிய பூங்காவின் அதிகாரி தெரிவித்தார்.

கதிர்காம பாத யாத்திரை ஆரம்பமாகவுள்ள நிலையில், வனப் பூங்கா மற்றும் வன விலங்குகளை புகைப்படம் எடுத்தல் மற்றும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு அனுமதி இல்லை என்றும், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்பொருளாக்களை எடுத்துச் செல்வதை தவிர்க்குமாறும் சுற்றாடல் அமைச்சர் வைத்திய தம்மிக பட்டபெந்தி பக்தர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.