சிங்கள அரச வரையறைக்குள் நின்று கொண்டு நாம் சட்டத்தின் ஆட்சி மூலமாக எமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாது.
.
சிங்கள அரச வரையறைக்குள் நின்று கொண்டு நாம் சட்டத்தின் ஆட்சி மூலமாக எமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாது.
கடந்த 15 ஆண்டுகளில்,
மாமனிதர் திரு ரவிராஜ் படுகொழூலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சகலரையும் விடுதலை செய்து இருக்கின்றார்கள்
திருகோணமலை குமரபுரம் பகுதியில் 24 பொதுமக்களை படுகொழூலை வழக்கில் அடையாளம் காணப்பட்டிருந்த இராணுவ உறுப்பினர்கள் 6 பேரையும் விடுதலை செய்து இருக்கின்றார்கள்
திருகோணமலை 5 மாணவர்கள் படுகொழூலை வழக்கில் சம்பந்தப்பட்ட 13 இராணுவ அதிகாரிகளையும் விடுதலை செய்து இருக்கின்றார்கள்
மாமனிதர் ஜோசப் பரராஜசிஙகம் படுகொழூலை வழக்கிலிருந்து பிள்ளையான் உட்பட்ட சகல புலனாய்வாளர்களையும் விடுவித்து இருக்கின்றார்கள்
யாழ்ப்பாணத்தில் கூட்டு பலாத்காரத்தின் பின் படுகொழூலை செய்யப்பட்ட செல்வி ரஜினி வேலாயுதம்பிள்ளை என்ற பெண் தொடர்பான வழக்கின் குற்றவாளிகளான இராணுவத்தினரை விடுவித்து இருக்கின்றார்கள்
அக்சன் பாம் என்கின்ற அரசசார்பற்ற நிறுவன பணியாளர்கள் 17 பேர் படுகொழூலை வழக்குக்கு சான்றுகள் இல்லை என்கிறார்கள்
கொழும்பில் இருந்து கடத்தி திருகோணமலையில் வைத்து கொலை செய்யப்பட்ட 11 தமிழ் மாணவர்கள் தொடர்பான வழக்கும் முழுமையாக முடக்கியிருக்கின்றார்கள்
ஊடகவியலாளர் திரு நிமலராஜன் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது என வழக்கு கைவிட்டு இருக்கின்றார்கள்
ஊடகவியலாளர் திரு சிவராம் படுகொலை வழக்கும் நீதிமன்றத்தில் கைவிட்டு இருக்கின்றார்கள்
இது போதாதென்று காணாமல் போனோர் தொடர்பான ஆட்கொணர்வு வழக்குகளை தாக்கல் செய்த பொதுமக்கள் நீதிமன்ற வளாகத்தில் வைத்தே புலனாய்வாளர்களால் தாக்கப்பட்டு இருக்கின்றார்கள்
அதே போல சட்டத்தரணிகள் அச்சுறுத்தபட்டு இருக்கின்றார்கள்
சட்டமா அதிபர் திணைக்களம் குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் சார்பில் ஆஜராகி இருந்தது
இராணுவ புலனாய்வாளர்களில் கடும் அழுத்தத்தினால் பதவி இழந்த யாழ்ப்பாண பல்கலை கழக துனைவேந்திர் பேராசிரியர் விக்னேஸ்வரன் தாக்கல் செய்த வழக்கு கூட தள்ளுபடி செய்து இருக்கின்றார்கள்
இது தவிர, கடந்த தேர்தலில் மிக பெரும் பேசுபொருளாகவிருந்த கன்னியா வெந்நீர் ஊற்று முழுமையாக தொல்லியல் திணைக்களம் வசம் கொண்டுவரப்பட்டுள்ளது
மிருசுவில் 52 பிரிகேட் தலைமையகம் அமைந்துள்ள தனியார் ஒருவரின் காணியை இராணுவம் ஆக்கிரமித்துள்ள வழக்கில் தேசிய பாதுகாப்பை சமரசம் செய்ய முடியாது என நீதிமன்றம் வழக்கை தள்ளுப்படி செய்துள்ளது
நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தம்மாலங்காரகீர்த்தி தேரர் என்கின்ற பிக்குவின் இறுதிக் கிரியைகளை செய்ய கூடாது என உள்ளூர் நீதிமன்றம் தடை செய்தும் பொலிஸ் அதிகாரிகள் முன்பே இறுதிக்கிரியைகள் நடத்தப்பட்டன
திருகோணமலை ஸ்ரீ மலை நீலியம்மன் கோவில் வளாகம் தீயிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பௌத்த பிக்குவின் உதவியாளர் மீதான வழக்கு கைவிடப்பட்டுள்ளது
இலங்கை நீதிமன்றங்கள் சிங்கள பௌத்த அரசியலின் அடிப்படைக் கருத்தியலை-தேசிய பாதுகாப்பை கேள்விக்குட்படுத்த மறுப்பதால் தான் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு இலங்கை நீதிமன்றங்களில் நீதி தொடர்ந்தும் மறுக்கப்படுகின்றது (சில விதி விலக்குகள் உண்டு) என்பதற்கு
இந்த வழக்குகள் சான்றாக இருக்கின்றன
ஆனால் மேற்படி உண்மைகளை மறைத்து ஒரு சிலர் வாக்கரசியலுக்காக இலங்கை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து ஏன் நீதியை பெற முடியாது என விதண்டாவாதம் பேசுகின்றார்கள்
இலங்கை சட்டங்களை ஏன் ஏற்க முடியாது என மேதாவிதமானாக கேட்கின்றார்கள்
இலங்கை சட்டங்களை நம்ப முடியாது என சொல்லவே முடியாது என்கின்றார்கள்
உண்மையில் தமிழ் சமூகம் சட்டங்களை உருவாக்குகின்ற அரச வரைமுறையைக் நீண்டகாலமாக கேள்விக்குட்படுத்தி வருகின்றது
அதாவது இன்றிருக்கும் அரச வரையறைக்குள் நின்று கொண்டு நாம் சட்டத்தின் ஆட்சி மூலமாக எமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாது என்ற முடிவை நாம் சுயாட்சி கேட்கத் தொடங்கிய காலத்திலிருந்தே சொல்லி வருகின்றோம்.
ஆனால் ஒரு சிலர் இப்போது புது புது கதைகள் சொல்லுகின்றார்கள்.