Breaking News
பாரிய அளவிலான போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் 10 பேர் கைது
.

மாத்தறை- கந்தர பகுதியில் பாரிய அளவிலான போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறை பிரிவு குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே போதைப்பொருட்களுடன் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களிடம் இருந்து 160 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 60 கிலோ ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.