Breaking News
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் கருத்து முரண்பாடு?; ஹரிணி விளக்கம்
.
தனக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக சிலர் பொய்யான தகவல்களை வெளியிடுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் அத்திடிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றது இங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
”தனக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக பொய்யான தகவல்கள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன.
அவ்வாறு எவ்வித முரண்பாடும் இல்லை. எங்களுக்குள் எவ்வித போட்டியும் இல்லை. நாங்கள் ஒன்றிணைந்தே தீர்மானங்களை எடுக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.