Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

வடக்கில் பலமிழந்து வருகின்றது தமிழரசுகட்சி

.

வடக்கில் தமது கட்சிக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்து வருவதால் அரசுடன் இணைந்து அதனைத் தக்கவைத்துக்கொள்வதற்குரிய தேவைப்பாடு இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மங்கள சமரவீரவுக்கும், சுமந்திரனுக்கும் நல்லுறவு இருந்தது. மங்கள ஜனாதிபதியாகி இருந்தால் சுமந்திரன் நிச்சயம் அமைச்சுப் பதவியை ஏற்றிருப்பார். இன்று மங்கள உயிருடன் இல்லை.

அடுத்தது சுமந்திரனுக்கும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் சிறந்த நட்பு உள்ளது. இருவரும் இணைந்து செயற்படக்கூடியவர்கள்.

1960 காலத்துக்குப் பின்னர் அவர்கள் (தமிழரசுக் கட்சி) அரசில் அங்கம் வகிக்காததால் வடக்கில் அவர்களுக்குரிய வாக்கு வங்கி வீழ்ச்சியடைந்து வருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 2015 இல் 16 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன. 2020 இல் அந்த எண்ணிக்கை 10ஆகக் குறைந்தது. எனவே, அவர்களின் இருப்பு வீழ்ச்சியடைந்து வருகின்றது.

எனவே, அரச பலம் மூலம் அதனைத் தக்கவைத்துக்கொள்வதற்குரிய தேவைப்பாடு அவர்களுக்கு உள்ளது.” – என்றார்.