Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

அமைச்சர் பதவி வழங்க முன்வந்த டிரம்ப்.. உடனே பதிலளித்த எலான் மஸ்க் – என்ன சொன்னார் தெரியுமா?

.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வேட்பளராக களம் காண்கிறார். அமரிக்கா மாகாணங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் டிரம்ப் நேற்று பென்சில்வேனியா மாகாணத்தில் நடத்த பிரச்சார கூட்டத்தில் பேசும்போது தொழிலதிபர் எலான் மஸ்கின் அறிவுத்திறன் குறித்து புகழ்ந்து பேசினார். மேலும் மஸ்க் விருப்பப்பட்டால், தான் ஜனாதிபதி தேர்தலில் வென்றதும் அவருக்கு மந்திரி பதவியோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியோ வழங்குவேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு எலான் மஸ்க் எப்போதும்போல தனது பாணியில் எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ளார். கோட் சூட்டுடன் மிடுக்காக மேடையில் பதவியேற்பதுபோன்ற தனது ஏஐ புகைப்படத்தை பகிர்ந்துள்ள மஸ்க், ‘சேவையாற்ற நான் விரும்புகிறேன்’ [I am willing to serve] என்று பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் DOGE [Department of government efficiency] என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. முன்னதாக அரசின் செயல்திறனை ஊக்குவிக்கும் அமைச்சகம் என்று ஒன்றை உருவாக்கி அதன் மந்திரியாக எலான் மஸ்க்கை நியமித்தால் நன்றாக இருக்கும் என்று இணையத்தில் பலர் கருத்து கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.